நாகர்கோவில், மார்ச் 4-வீடு இழந்தோருக்கு இழப்பீடு கேட்டு திங்க ளன்று பார்வதிபுரத்திலி ருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடை பயணம் நடைபெறுகின்றது.
சமீபத்தில் பார்வதிபுரம் அனந்தன் நகர், கேசவதிருப்பாபுரம் போன்ற பகுதிகளில் புறம்போக்கில் நீண்ட கால மாக அமைக்கப்பட்டிருந்த ஏழை மக்களின் குடிசை கள் அகற்றப்பட்டன.இதனால் பாதிக்கப் பட்ட மக்கள், மாற்று இடமின்றி சாலையோரம் வசிக் கும் அவல நிலை ஏற்பட் டுள்ளது. எனவே, அந்த மக் களுக்கு மாற்று இடமும் உரிய நஷ்ட ஈடும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பார்வதிபுரம் சந்திப்பிலிருந்து திங் கட்கிழமை காலையில் நடைபயணம் புறப்படு கிறது.
நடைபயணத்திற்கு மாவட்டச் செயலாளர் மi விளை பாசி தலைமை வகிக் கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.முருகேசன் நடைபயணத்தைத் துவக்கி வைத்துப் பேசுகிறார். முடிவில் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெறுகிறது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் மாவட்டத் தலைவர் தங்கப்பன் தலைமை வகிக் கிறார்.
நிகழ்ச்சியில் சகோதரச் சங்கங்களின் தலை வர்கள் போராட்டத்தை ஆதரித்துப் பேசுகின்றனர்.

Leave A Reply