திருப்பூர், மார்ச் 4-
திருப்பூர் சிறு விசைத் தறி உரிமையாளர்களிடம் பணியாற்றும் தொழிலாளர் களுக்கு 27 சதவிகிதம் சம் பள உயர்வு வழங்குவது என இருதரப்புப் பேச்சுவார்த் தையில் மூன்று ஆண்டு கால சம்பள ஒப்பந்தம் நிறை வேற்றப்பட்டது.
இந்த ஒப் பந்தம் உடனடியாக நடை முறைக்கு வருகிறது.திருப்பூரில் சிறு விசைத் தறி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் முருகேஷ், போஸ், ஈஸ்வரன் உள்ளிட் டோருக்கும், விசைத்தறித் தொழிலாளர்கள் சார்பில் சிஐடியு விசைத்தறித் தொழி லாளர் சங்கத்தின் மாவட் டப் பொதுச் செயலாளர் பி.முத்துச்சாமி, சிஐடியு மாவட்ட நிர்வாகி பி.முரு கேசன், பாலகிருஷ்ணன், எம்எல்எப் சார்பில் செ. முத்துக்குமாரசாமி ஆகி யோருக்கும் இடையே வெள்ளியன்று கூலி உயர்வு தொடர்பான பேச்சு வார்த்தை நடைபெற்றது.இப்பேச்சுவார்த்தையில் சிறு விசைத்தறி உரிமையா ளர் கூடங்களில் பணியாற் றும் தொழிலாளர்களுக்கு மூன்றாண்டு காலத்துக்கு 27 சதவிகிதம் சம்பள உயர்வு வழங்குவது என உடன்பாடு காணப்பட்டது.
இதன்படி முதல் ஆண்டு 15 சதவிகிதம், இரண்டாம் மற்றும் மூன் றாம் ஆண்டுகளில் தலா 6 சதவிகிதம் வீதம் சம்பள உயர்வு வழங்கவும் தீர்மா னிக்கப்பட்டது. இந்த ஒப் பந்தம் உடனடியாக நடை முறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.இந்த விபரத்தை சிஐடியு விசைத்தறித் தொழிலாளர் சங்க மாவட்டப் பொதுச் செயலாளர் பி.முத்துச்சாமி தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: