உதகை, மார்ச் 4-நீலகிரி மாவட்டத்தில் மலைப்பகுதியில் பணிபுரியும் சத்துணவு ஊழியர்களுக்கு மலைப்படி ரூ.900 வழங்க வேண்டும் என்று சத்துணவு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் நீலகிரி மாவட்ட முதலாவது பேரவை கூட்டம் மாவட்டத் தலைவர் பி.சிவதாஸ் தலைமையில் உதகையில் உள்ள அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடந்தது.
மாவட்டச் செயலாளர் எ.செல்லத்துரை வரவேற்றார். மாநில துணைத் தலைவர் எம். கருணாநிதி தொடக்கவுரை ஆற்றினார்.உதகை வட்டத் தலைவர் சங்கர், குன்னுர் வட்டத் தலைவர் கோபால்,கூடலூர் வட்டத்தலைவர் சிவலிங்கம், கோத்தகிரி வட்டத் தலைவர் ராமு, மாவட்டத் துணைத் தலைவர் செல்லத்துரை ஆகியோர் சங்க செயல்பாடுகள் குறித்து பேசினர்.மலைப்பகுதியில் பணிபுரியும் சத்துணவு ஊழியர்களுக்கு மலைப்படி ரூ.900, குளிர் காலப்படி ரூ.350 வழங்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் அஜிரா, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க கோவை மாவட்டத் தலைவர் இன்னாசிமுத்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஆர். கருணாகரன், நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஆர்.குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.இந்த பேரவையில் சிவதாஸ் தலைவராகவும், அ.செல்லத்துரை செயலாளராகவும், ஆர்.ராதா பொருளாளராகவும் மற்றும் 8 பேர் கொண்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். நிறைவாக பொருளாளர் ஆர்.ராதா நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: