சென்னை, மார்ச், 4 –
சென்ட்ரல் ரயில் நிலை யத்தில் சூட்கேசில் கடத்தி வந்த ரூ.1 கோடி மதிப்புள்ள போதை பொருளை அதி காரிகள் பறிமுதல் செய்த னர். 3 பேர் கைது செய்யப் பட்டனர்.சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப் படும் போதை பொருட் களை, மத்திய வருவாய் புல னாய்வு துறை, சுங்கத் துறை, போதை தடுப்பு பிரிவினர் விமான நிலையத்தில் அடிக் கடி சோதனை நடத்தி பறி முதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சியை சேர்ந்த பாலுசாமி (52), அக்பர் அலி (45), ஜாபர் அக மது (35) ஆகியோர் சனிக் கிழமையன்று ரயிலில் சென்னை வந்தனர். இவர் கள் போதை பொருள் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த கும்பலை பிடிக்க விமான நிலையத்தில் அதிகாரிகள் காத்திருந்தனர்.ஆனால், கடத்தல் கும்பல் சென்ட்ரல் ரயில் நிலையத் தில் இருந்து வேறு இடத் துக்கு போவதாக தகவல் கிடைத்தது. சனிக்கிழமை இரவு 11 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து டெல்லி செல்லும் தமிழ் நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தல் கும்பலை சேர்ந்த வர்கள் ஏறியிருந்தனர். மத் திய வருவாய் துறை புல னாய்வு அதிகாரிகள் விரைந்து சென்று அந்த கும்பலை மடக்கினர். அவர்கள் 3 பேரி டமும் டெல்லியில் இருந்து விமானத்தில் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்ல டிக்கெட் இருந்தது. அவர்கள் வைத்திருந்த 2 சூட்கேசை திறந்து பார்த்த போது அதில் துணியை தவிர ஏதும் இல்லை.பின்னர் சூட்கேசை நன்றாக ஆராய்ந்த போது அதன் அடி பாகத்தில் ரக சிய குட்டி அறை போன்று இருந்தது. அதை உடைத்து பார்த்தபோது அதில் 6 கிலோ எடை எபட்ரின் என்ற போதை பொருள் இருந்ததை கண்டுபிடித்த னர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.1 கோடி 20 லட்சம். பின் னர் கடத்தல் கும்பலை அதி காரிகள் கைது செய்து போதை பொருட்களுடன் சென்னை தி.நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். இரவு முழுவதும் அங்கு விசா ரணை நடத்தினர். ஞாயிறன்று காலை சென்னை விமான நிலைய சுங்க துறை அதிகாரிகளிடம் 3 பேரையும் ஒப்படைத்துள்ளனர்.
இதுதொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வு துறை கூடுதல் தலைமை இயக்கு னர் ராஜன் கூறுகையில், விமான நிலையங்களில் அடிக்கடி சோதனை நடத் துவதால், ரயிலில் போதை பொருளை கடத்த தொடங் கியுள்ளனர். அவர்களை கைது செய்து விசாரித்ததில் தற்போது பிடிபட்டுள்ள 3 பேரும் கூலிக்காக கடத்து பவர்கள்.இவர்கள் ஒரு முறை மலேசியா சென்று வந்தால் விமான, ரயில் டிக்கெட் அனைத்தும் போக ஒவ் வொருவருக்கும் தலா ரூ.5,000 கிடைக்கும். பணத் துக்கு ஆசைப்பட்டு கடத்த லில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களை இயக்கிய முக் கிய குற்றவாளிகள் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகி றோம் என்றார்.

Leave A Reply

%d bloggers like this: