முற்போக்கு தமிழ் இலக்கிய உலகின் முன்னத்திஏராக விளங்குபவர் கு.சி.பா என அன்போடு அழைக்கப்படும் கு. சின்னப்பபாரதி. முற்போக்கு இலக்கியப் படைப்புகள் ஒரே மொழியில தேங்கி விட்டால் அதன் பயன்பாடு குறைவா கவே இருக்கும். பல மொழிகளில் பெயர்க் கப்படும் போது தான் தமிழ் இலக்கிய உலகத்திற்கான முற்போக்கு முகம் வெளிப்படும்.அந்த வகையில் தோழர் கு. சி.பா அவர்களின் புதினங்கள் பிற மொழிக ளில் மொழிபெயர்க்கப்படுகின்றன. இந்தியாவில் பிற மாநிலங்களில் மட்டு மின்றி உஸ்பெகிஸ்தானின் உஸ்பெக்மொழியிலும் இலங்கையில் சிங்கள மொழியிலும் கு.சி.பா நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இதுவரை 10க்கும் அதிகமான மொழிகளில் இவரது புதினங்கள் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. கு.சி.பா. வின் ‘தாகம்’ நாவல் சிங்கள மொழியில் ‘ஜீவதா’ என மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.இவரது ‘சர்க்கரை’ நாவல் ஏற்கெனவே மராத்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இப்போது “சங்கம்” பொழிபெயர்ப்பும் வந்துள்ளது.
இதற்கான நூல் வெளியீட்டு விழாவில் பேசியவர்கள், “கு. சின்னப்ப பாரதியின் நாவலான சர்க்கரை மராட்டிய இலக்கியத்தில் ஒரு முன் மாதி ரியை உருவாக்கியிருக்கிறது. தொழிலாளர் இயக்கத்தைப் பற்றி மராட்டிய இலக்கியத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காது. இன்றும் கூட பெரும் பான்மையான எழுத்தாளர்கள் கலை இலக்கிய உலகில் இது பற்றிய சிந்தனை தேவையில்லை என்று நம்புகிறார்கள். இந்நிலையில் சின்னப்பபாரதியின் சர்க்கரை நாவல் முன்னுதாரணமாக இருப்பதற்குக் காரணம் சர்க்கரைத் தொழிலில் ஈடுபட்ட பாட்டாளி மக்களுடன் சேர்ந்து அவர் பாடுபட்ட வர். இந்த அனுபவம் இங்குள்ள படைப்பாளிகளுக்கு இல்லாத காரணத்தினால் அவர் நாவல் வெற்றி காண முடிந்திருக்கி றது.இந்த நோக்கில் தான் சின்னப்பபாரதி யின் இரண்டாவது நாவல் சங்கம் மொழி பெயர்க்கப்பட்டுவந்திருக்கிறது. இது மலை வாழ் மக்களின் வாழ்க் கைத் துயரத்தையும், சுரண்டல் கொடுமையையும் எதிர்த்து மக்களைத் திரட்டிப் போராடும் வடிவமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. கோதாவரி பருலேகரும் மலை மக்களைப் பற்றி தன் வரலாறு எழுதியுள்ளார்.
இரண்டும் வெவ்வேறான அனுபவத்தில் வெவ்வேறான தனித்தப் போக்கில் எழுதப் பட்டுள்ளன.‘சங்கம்’ வடிவில் மிகவும் உயர்ந்துள்து. அது கூறும் பல புதிய செய்தி கள், புதிய சம்பவங்கள் மராட்டிய வாசகர்களிடையே பெரும் வரவேற் பைப் பெறும் என்பது உறுதி. உழைக்கும் வர்க்கத்தைப் பற்றிய அவரு டைய பிற நாவல்களை ஹீலா ராம்சுபே மேலும் மொழி பெயர்த்து கொடுக்கும் படி வாழ்த்துகிறோம்.” என்று கூறியிருப்பது கு.சி. பாவுக்குக் கிடைத்த பெருமை என்பதை விட முற்போக்குத் தமிழ் இலக்கியத்திற்குக் கிடைத்த பெருமை எனலாம். முற்போக்கு இலக்கியங்கள் படைத்ததில் கு.சி.பா முன்னணியில் இருப்பது போலவே மொழியாக்கம் செய்யப்படு வதிலும் இவரது நாவல்களே முன்னணியில் உள்ளன எனலாம்.

Leave A Reply

%d bloggers like this: