சென்னை, மார்ச் 4 –
மேட்டூர் அணை கட் டப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதை ஒட்டி, அங்கு அமைக்கப்பட்டுள்ள பவள விழா நினைவு கோபு ரத்தை முதல்வர் ஜெயல லிதா சனிக்கிழமை திறந்து வைத்தார். ரூ.1 கோடி செல வில் கட்டப்பட்டுள்ள இந்தக் கோபுரத்தில் இருந்து அணையைக் கண்டு ரசிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப் பில், சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், பெரம் பலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 11 மாவட்டங்களில் 16.50 லட்சம் ஏக்கர் பாசன நிலங்களும், சேலம், நாமக் கல், ஈரோடு மாவட்டங்களி லுள்ள சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், காவிரி ஆற்றின் நீரினால் மேட்டூர் அணையின் மூலம் பாசன வசதி பெறுகின்றன.
பொதுப் பணித் துறையின் மிகச் சிறந்த சாதனைக்கு சான்றாக விளங்கும் மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு பெற் றுள்ளது. இதையொட்டி, ரூ.1 கோடி மதிப்பில் பவள விழா நினைவுக் கோபுரம் கட்டப்பட்டுள்ளது.இந்த பவள விழா கோபுரம் தரைதளம் உள் பட ஏழு தளங்களைக் கொண் டது. இதன் முன்பகுதியில் வாகனங்களை நிறுத்தவும், அதன் அடுத்த பகுதியில் பார்வையாளர்கள் உள்ளே சென்று பார்ப்பதற்கும் வச திகள் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கோபுரத்தின் உள்ளே மேட்டூர் அணையின் பழங் கால கட்டுமானப் பணி களை சித்திரிக்கும் படங்கள், அருங்காட்சியகம், மேட் டூர் அணை குறித்த புத்தகங் கள், வரைபடங்கள் அடங் கிய நூலகம் போன்ற பகுதி கள் கூடாரம் அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளன.தரைத்தளத்தில் இருந்து 75 அடி உயரமுள்ள மேல் தளத்துக்கு 6 நபர்கள் செல் லக்கூடிய வகையில் லிப்ட் வசதியும், படிக்கட்டு வசதி யும் செய்யப்பட்டுள்ளன.
இந்த பவளவிழா நினைவு கோபுரத்தின் ஆறாவது தளத் தில் பார்வையாளர்கள், சுற்றுலாப் பயணிகள் நின்று மேட்டூர் அணை யின் தோற்றத்தையும், நீர் தேக்கத்தின் நீர்ப்பரப்பு காட்சிகளையும் 33 ஏக்கர் பரப்பளவு கொண்ட லேடி பெட்ரிக் ஸ்டான்லி பூங் காவையும் கண்டு களிக்கும் வகையில் வட்ட வடிவில் மாடம் அமைக்கப்பட்டுள்ளது.விடியோ கான்பரன்சிங் முறை மூலம் பவளவிழா நினைவு கோபுரத்தை முதல் வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சி யில், பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி.ராமலிங் கம், தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, பொதுப்பணித் துறை செய லாளர் சாய்குமார் உள் ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: