ஆலந்தூர், மார்ச் 4 –
முன்னாள் ராணுவ வீரர் கள் மற்றும் போரில் உயிரி ழந்த ராணுவ வீரர்களின் மனைவிகளிடம் குறை கேட் டறிதல், நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி திரிசூலத்தில் உள்ள ராணுவ முகாமில் ஞாயிறன்று நடந்தது. தமிழ் நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரள பகுதிக்கான ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் எம்.எஸ்.ஜம்வால் தலைமை வகித்தார். தமிழ்நாடு முன் னாள் படை வீரர்கள் நல வாரிய இயக்கு நரும், அரசு இணை செயலாளருமான மைதிலி ராஜேந்திரன் முன் னிலை வகித்தார்.இம்முகாமில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், திரு வண்ணாமலை, கடலூர், மற்றும் புதுச்சேரி பகுதியில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள், கணவனை இழந்த வர்கள் 400 பேர் கலந்து கொண்டனர். 40 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.பின்னர் மேஜர் ஜென ரல் எம்.எஸ்.ஜம்வால் நிரு பர்களிடம் கூறுகையில், முன்னாள் ராணுவ வீரர்க ளின் குறைகளை கேட்ட றிந்து களையப்படுகிறது. அவர்களுக்கு இலவச மருத் துவ உதவி கிடைக்க வழி செய்யப்படும் என்றார்.இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதில் 500க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: