திருச்சிராப்பள்ளி, மார்ச் 4-
மின்வெட்டை கண்டித்து மார்ச் 27ம்தேதி மாநிலம் முழு வதும் மத்திய, மாநில அரசு அலுவலகங்களின் முன் மறியல் போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. தெரி வித்தார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி திருச்சி வெண்மணி இல்லத்தில் ஞாயிறு அன்று நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளால் தொடர்ந்து விலைவாசி உயர்ந்து வருகிறது. விவ சாயம் என்பது லாபகரமற்ற தொழி லாக மாறிவிட்டது. மின்தடை, பால், பஸ்கட்டணஉயர்வு போன்ற வற்றால் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் தே.மு.தி.கவிற்கு ஆதரவு அளித்துள்ளோம். மக்கள் நலனை அடிப்படையாகவும் அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்திக்கு மின்சாரம் கொடுக்காதவர்கள் பன்னாட்டு கம்பெனிகளுக்கு 24 மணிநேர மின்சாரம் மற்றும் 15 வருட வரி விதிவிலக்கு அளிக்கிறார்கள்.
பன்னாட்டு நிறுவனங்களுடன் எப் படிப்பட்ட ஒப்பந்தம் போட்டுள் ளீர்கள் என்று திமுக மற்றும் அதி முக அரசுகளிடம் கேட்டோம். அவர்கள் ஒப்பந்தத்தை வெள்ளை அறிக்கையாக தர மறுக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் நிறுவன மாக அரசு இருக்கிறது. இலங்கைஇலங்கை பிரச்சனையில் 1983 லிருந்தே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரே நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. போருக்கு பின் னால் இந்தியஅரசு எடுத்துள்ள நடவடிக்கை போதாது. அங்கு நடந்த போர்குற்றங்களை பற்றி விசாரிக்க நம்பகத்தன்மையுடைய ஒரு குழுவை அமைத்து போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த கொடுமைகள் குறித்து விசாரணை நடத்தவேண்டும்.இலங்கையில் தமிழ்மக்கள் முழு உரிமையுடன் அரசியலில் பங்கு பெற அனைத்து ஜனநாயக உரிமைகளையும் தர வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு ஏப்ரல் 4ம்தேதி முதல் 9ம் தேதி வரை கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற உள் ளது. விலைவாசி உயர்வு, பால் விலை உயர்வு, மின்தடை, கல்வி தனியார்மயம் ஆகிய மக்கள் பிரச்சனைக்களுக்காக அரசின் கவ னத்தை ஈர்க்க மார்ச் 27ம்தேதி மாநி லம் முழுவதும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன் மாபெரும் மறியல் போராட்டம் நடத்தப் படும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாவட்ட செயலாளர் எஸ்.ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.மாசி லாமணி, சிவராஜ், மாநகர செய லாளர் வெற்றிச்செல்வன் ஆகி யோர் உடனிருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.