புதுக்கோட்டை, மார்ச் 4-
அரிமளம் மற்றும் திரு மயம் ஊராட்சி ஒன்றியங் களில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் நடை பெற்ற சாலைப்பணிகள் மற்றும் அரசு மருத்துவ மனைகளை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ப. மகேஸ்வரி சனிக்கிழமை யன்று ஆய்வு செய்தார். அரிமளம் அரசு மருத் துவமனையில் மருத்துவ அலுவலர்களின் பணிகள், பிரசவித்த நோயாளிகளின் சிகிச்சை விவரம் கேட்ட றிந்த அவர், சுற்றுப்புற சுகா தாரத்தை மேம்படுத்துமாறு உத்தரவிட்டார்.
பின்னர் ரூ.61 லட்சம் மதிப்பில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் அரிமளம்-திருமயம் சாலையில் 2 முதல் 4 கி.மீ. வரை போடப்பட்டுள்ள சாலை மேம்பாட்டுப் பணி களை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து திருமயம் அரசு மருத்துவ மனையை ஆய்வு செய்த அவர், அறுவைச் சிகிச்சை செய்த நோயாளிகள், உள் நோயாளிகளின் மருத்துவ சிகிச்சை குறித்தும், மருந்து இருப்பு விவரங்களையும் தலைமை மருத்துவ அலு வலரிடம் கேட்டதோடு, மருத்துவமனையை சுகாதா ரமாக பராமரிக்க அலுவலர் களுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின் போது நெடுஞ் சாலைத்துறை கோட்டப் பொறியாளர் பி.சத்திய மூர்த்தி, உதவி கோட்டப் பொறியாளர் ஏ.செந்தில் குமார், துணை இயக்குநர் (குடும்பநலம்), கரு.இராம நாதன், மருத்துவர்கள் திரு நாவுக்கரசு, மதுராந்தகி உள் ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: