புதுக்கோட்டை,மார்ச் 4-
திருமயம் ஒன்றியம் காட்டுபாவாபள்ளிவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விரிவாக்கப்பட்ட மருத்துவக்காப்பீட்டு திட்ட முகாமினை ஞாயிறன்று மாவட்ட ஆட்சியா ப.மகேஸ்வரி தொடங்கி வைத்தார். மேலும், பொன்னமராவதி ஸ்ரீதுர்கா அறுவை சிகிச்சை நிலையம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் தமிழக முதல மைச்சரின் விரிவாக்கப்பட்ட மருத்துவக்காப்பீட்டு திட்டம் முகாம் நடை பெற்றது.
இம்முகாமையும் ஆட்சியர் துவக்கிவைத்தார்.அப்போது அவர் பேசியதாவது:இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 5 தனியார் மருத்துவ மனைகள், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு அரசு பொது மருத்துவமனை உட்பட 6 அரசு மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 3.50 லட்சம் குடும்பங்கள் பயன்பெற உள்ளன. பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை முறைகள் உட்பட 1016 சிகிச்சை முறைகளும், 113 தொடர் சிகிச்சை முறைகளும், 23 நோய் கண்டுபிடிப்புகளுக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் அரசு பொதுமருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கூடிய தனிவார்டுகள் விரைவில் அமைக்கப்பட உள்ளன.
இத்திட்டத்தில் தகுதியுள்ள குடும்பத்தினர் அனைவருக் கும் மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கப்படும். தற்சமயம் அட்டை இல்லாதவர்கள் அவசரமாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருப்பின் அவர்களின் குடும்ப அட்டை நகல், வரு மானம் குறித்த கிராம நிர்வாக அலுவலரின் சான்றிதழ் பெற்று, மேற்குறிப்பிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ.72 ஆயி ரத்திற்குள் இருக்க வேண்டும்.இவ்வாறு ஆட்சியர் குறிப்பிட்டார்.முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் க.நாகராசன், திரு மயம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மதுராந்தகி, வட்டாட்சியர் எம்.வேலுமணி, ஊராட்சிமன்றத் துணைத் தலை வர் ஜபருல்லா, ஸ்ரீதுர்கா மருத்துவமனை நிர்வாக அலுவலர் கிருபாகரன், டாக்டர் அழகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: