உடுமலை, மார்ச் 4-
மக்கள் நலப்பணியாளர்களுக்கு பணி வழங்கக் கோரி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் வாழ்த்தி பேசிய அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளை தாக்கி, கைது செய்த காவல் துறையை கண்டித்து உடுமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மக்கள் நலப்பணியார்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பணி வழங்க வேண்டும் எனக் கோரி மக்கள் நலப்பணியாளர்கள் தாராபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தை வாழ்த்திப் பேசிய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டபொருளாளர் ஆ.அம்சராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் மா.பாலசுப்பிரமணியன், தாராபுரம் வட்டக்கிளை செயலாளர் என்.ஈஸ்வர மூர்த்தி ஆகியோரை காவல் துறையினர் காட்டு மிராண்டித்தனமாக தாக்கியதுடன், கைது செய்தனர். காவல் துறையின் இச்செயலை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உடுமலைப்பேட்டை வட்டக்கிளையின் சார்பில் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் வட்டக்கிளைத் தலைவர் எம்.புவனேஸ்வரி தலைமை வகித்தார். அங்கன்வாடி ஊழியர் சங்கம் அம்சவேணி, சத்துணவு ஊழியர் சங்கம் ஜெ. பால்ராஜ், பி.சுந்தரம், கிராம உதவியாளர் சங்கம் பி.சுந்தரம், சித்த மருந்தாளுநர் சங்கப் பொதுச் செயலாளர் எஸ்.பாலு, தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை அலுவலர் சங்கச் செயலாளர் ஜி.எஸ்.ராமாச்சாரி உள்ளிட்டோர் காவல் துறையின் தாக்குதலைக் கண்டித்து கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தை நிறைவுசெய்து வட்டக்கிளை பொருளாளர் கே.ஆறுமுகம் உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு 30 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: