புதுதில்லி, மார்ச் 4-
கிழக்கு ராணுவப்படை பிரிவின் தலைமை அதிகாரி யான, துணை ராணுவத்தள பதி லெப்டினன்ட் ஜெனரல் விக்ரம் சிங், 13 லட்சம் வீரர் களைக் கொண்ட தரைப்ப டையின் புதிய தளபதியாக பொறுப்பேற்கிறார். தற்போதைய ராணுவத் தளபதி விஜயகுமார் சிங், இந்த ஆண்டு மே மாதம் 31ம் தேதி ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து, விக்ரம் சிங் புதிய தளபதியாக பொறுப் பேற்கிறார். இதற்கானஅறிவிப்பை பாதுகாப்புத்துறை அமைச் சகம், சனிக்கிழமை அறிவித் தது. விக்ரம் சிங் பதவியேற் பதற்கு 90 நாட்கள் முன்பா கவே இந்த அறிவிப்பு வெளி யாகியுள்ளது. பொதுவாக புதிய தளபதி நியமன அறி விப்பு 60 நாட்கள் முன்பா கத்தான் அறிவிக்கப்படும். மத்திய அரசின் இந்த நட வடிக்கை புதிய ராணுவத் தளபதி நியமனம் தொடர் பான யூகங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது.ராணுவத் தளபதி வி.கே. சிங் தனது பதவி விலகலை முன்கூட்டியே அறிவிப்பார். அதனால் மிகுந்த அனுபவம் வாய்ந்த ராணுவ அதிகாரி, அடுத்த தலைவராக பதவி ஏற்பதில் மாற்றம் என்ற தகவல்களும் வெளிவந்தன.
இதுபோன்ற யூகங் களை திட்டவட்டமாக மறுத்த வி.கே.சிங் ஓய்வு பெறுவதற்கு முன்னர், நான் ராஜினாமா செய்யப்போவது இல்லை என கூறிய மறு நாள், பாதுகாப்புத்துறை அமைச்சகம், புதிய ராணு வத் தளபதி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தனது பிறந்த தேதி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன் றத்தில் தாக்கல் செய்யப் பட்ட மனு நிராகரிக்கப்பட் டதும் வி.கே.சிங், உடனடி யாக பதவியை ராஜினாமா செய்வார் என சில தொலைக்காட்சிகளும், சில நாளிதழ்களும் செய்தி வெளியிட்டன.புதிய ராணுவத் தளபதி விக்ரம் சிங் 1972ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி சிக்லைட் காலாட்படை படைப்பிரி வில் சேர்க்கப்பட்டார். கடந்த 40 ஆண்டுகளாக ராணுவத் தில் அதிகாரி மற்றும் ஊழி யர் நியமனம் தொடர்பான பல பணிகளை வகித்துள்ளார்.
வடக்குப்படை பிரி வின் தலைவராகவும் காங் கோவில் பல நாடுகள் ஐ.நா. அமைதி நடவடிக்கையில் துணை கட்டுப்பாட்டு அதி காரியாகவும் இருந்துள் ளார். 1990ம் ஆண்டுகளின் துவக்க காலகட்டத்தில் நிகர குவா மற்றும் எல்சல்வே டார் நாடுகளில் ஐ.நா. கண் காணிப்பாளராக இருந்துள் ளார்.லெப்டினன்ட் ஜெனரல் விக்ரம் சிங், பாதுகாப்பு சேவை ஊழியர் கல்லூரி யில் படித்துள்ளார். ராணுவ போர்க்கல்லூரியிலும் அமெரிக்க ராணுவப் போர் கல்லூரியிலும் படித்துள் ளார். இந்தூர் பல்கலைக்கழ கத்தில் பாதுகாப்பு நிர்வாகத் தில் எம்.பில் படித்துள்ளார். பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.