சென்னை, மார்ச் 4 –
மின் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் அரசு அளித்துள்ள அனுமதியின் பேரில் பள்ளிகள் பயன் படுத்தும் ஜெனரேட்டர் கள் 5 கிலோ வாட் திறனை மிஞ்சக் கூடாது என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள் ளது.இந்த ஆண்டு 10-ம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வு களை சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுத உள்ள னர். மின்வெட்டால் மாண வர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மேல் நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஜெனரேட் டர்கள் மூலம் மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந் தார்.இதற்கான அரசாணை சனிக்கிழமை பிறப்பிக்கப் பட்டது. இதன்படி, அரசுப் பள்ளிகளுக்கு ஜெனரேட் டர்களை அரசே வாடகைக் குப் பெற்று வழங்கும். ஜென ரேட்டர்களை இயக்குவதற் கான டீசல் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும். அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மேல்நிலை மற்றும் உயர் நிலைப் பள்ளிகள் ஜெனரேட் டர்களை வாடகைக்கு எடுத்து இயக்கிக் கொள்ள லாம்.
அதற்கு ஏற்படும் கூடு தல் செலவை அரசு ஏற்கும். மார்ச், ஏப்ரலில் மட்டுமே இந்த வசதி செய்துதரப் படும்.அரசு அனுமதியின் பேரில் பள்ளிகள் பயன் படுத்தும் ஜெனரேட்டர் கள் 5 கிலோ வாட் திறனை மிஞ்சக் கூடாது. அரசுப் பள்ளிகளைப் பொறுத்த வரை, இந்த ஜெனரேட் டரை பயன்படுத்துவதால் ஆகும் ஒட்டுமொத்த செலவு மாதத்துக்கு ரூ. 40,200-ஐ தாண்டக் கூடாது. அரசு உதவிபெறும் மற்றும் தனி யார் பள்ளிகளுக்கு இந்தத் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு அளவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள் ளது. அதாவது ஒட்டுமொத்த செலவு மாதத்துக்கு ரூ. 26,800-ஐ தாண்டக் கூடாது.மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட குழுக் கள், அரசு அளித்துள்ள வழிகாட்டுதல்களின்படி பள்ளிகளுக்கு ஆகும் இந்த செலவினத்துக்கான ஒப்பு தலை அளிக்கும். இந்த செல வினங்களை அரசுப் பள்ளி கள், தங்களிடமுள்ள பெற் றோர் – ஆசிரியர் நிதி, பள்ளி சிறப்புக் கட்டணம் ஆகிய வற்றிலிருந்து செலவழித்துக் கொள்ள வேண்டும்.
இந்தச் செலவினம் முழுவதையும் பின்னர் அரசிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொள் ளலாம்.அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள், தங்கள் சொந்த செலவில் ஜெனரேட்டர்களை முத லில் வாடகைக்கு எடுத்துக் கொள்ளவேண்டும். பின்னர் மாவட்ட குழுவின் பரிந்து ரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் அரசிடமிருந்து செல வினத்துக்கான தொகையை பெற்றுத் தரு வார்.இவ்வாறு அரசாணை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply