ஹைதராபாத், மார்ச் 4-
ஆந்திர அரசு மீது நம் பிக்கை கோரும் தீர்மானத் தில் அதற்கு எதிராக வாக் களித்த ஜெகன் மோகன் ஆதரவு காங்கிரஸ் எம்எல் ஏக்களை சட்டமன்ற சபா நாயகர் தகுதிநீக்கம் செய்தார். உறுப்பினர் பதவியிலி ருந்து தகுதி நீக்கம் செய்யப் பட்டதை வரவேற்ற, காங் கிரஸ் கோஷ்டி எம்எல்ஏக் கள் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும் கடப்பா தொகுதி எம்பியுமான ஜெகன் மோகன் ரெட்டியை சனிக்கிழமை அவரது இல்லத்தில் சந்தித் தனர்.சட்டமன்ற உறுப்பினர் கள் ஸ்ரீகாந்த் ரெட்டி, சென் னக்கேசவ ரெட்டி, சுசித்ரா, ராமகிருஷ்ணா ரெட்டி, கே. ஸ்ரீனிவாசலு ஆகியோர் ஜெகன் மோகனிடம் எதிர் காலத்திட்டம் குறித்து நீண்ட ஆலோசனை நடத்தினர்.பின்னர் அவர்கள் செய் தியாளர்களிடம் கூறுகை யில், ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக நாங்கள் வாக்களித்ததும் தகுதி நீக்கத்திற்கு தயாராகி விட்டோம். எங்களது பதவி களை தியாகம் செய்வதற்கு தயாராக உள்ளோம். விவ சாயிகளுக்கு ஏற்பட்ட துயர விளைவுகளுக்காக எங்க ளது நிலைப்பாட்டில் உறு தியாக உள்ளோம் என்றனர்.
தகுதி நீக்கம் ஏற்படு வதற்கு காரணமான சூழல் குறித்து, தங்கள் தொகுதி களுக்கு சென்று, தொகுதி மக்களிடம் விளக்குவோம் என்றும் அவர்கள் கூறினர்.16 காங்கிரஸ் எம்எல்ஏக் களை தகுதி நீக்கம் செய்வ தாக, சட்டமன்ற சபாநாய கர் நந்தேலா மனோகர் சனிக்கிழமை இரவு உத்தரவு வெளியிட்டார். அவர்கள் கட்சிக் கொறடாவின் உத்தர வை மீறி காங்கிரஸ் அரசு மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தால் கட்சித்தா வல் தடுப்புச் சட்டப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்ட தாக சபாநாயகர் தெரிவித் தார். காங்கிரஸ் அரசின் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மா னத்தை தெலுங்குதேசம் கட்சி கடந்த ஆண்டு டிசம் பர் 5ம் தேதி கொண்டு வந்தது.இதற்கிடையே ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் சத்யநாராயணா செய்தி யாளர்களிடம் கூறுகையில், தகுதி நீக்கம் ஆனதால் 17 தொகுதிகளில் நடைபெ றும் இடைத்தேர்தலில் வெற் றியை எட்டுவோம் என்றார்.

Leave A Reply