திருச்சி, மார்ச் 4-திருச்சியில் தனியார் நிறுவனத்தின் பணிநீக்க நட வடிக்கையால் சுமைப்பணியாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.திருச்சி உய்யகொண் டான் திருமலை கீழத்தெரு வை சேர்ந்தவர் முருகானந் தம் (38). இவர் திருச்சி நாகப்பா கார்ப்பரேசனில் கடந்த 7 வருடங்களாக சுமைப்பணியாளராக பணி யாற்றி வந்தார். இவருக்கு ரஞ்சனி என்ற மனைவியும், காவ்யா(6) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் முருகா னந்தத்தை கடந்த 3 மாதங் களுக்கு முன் நிர்வாகம் எவ் வித முன்னறிவிப்புமின்றி பணிநீக்கம் செய்தது.
இந்த பணிநீக்கத்தை எதிர்த்து முருகானந்தம் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.இதனிடையே வேலை இல்லாததால், வறுமை நிலைக்கு தள்ளப்பட்ட முரு கானந்தம் மனமுடைந்து வியாழனன்று மதியம் தூக் கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் தற் கொலைக்கு நிர்வாகம் இவரை நீக்கியதுதான் கார ணம் என்று கூறப்படுகிறது.எனவே, சம்பந்தப்பட்ட தனியார் நிர்வாகத்தின் உரிமையாளரை கைது செய்யவேண்டும் என்றும், இறந்தவரின் குடும்பத்தாருக்கு நஷ்டஈடு வழங்கக் கோரியும் முருகானந்தத்தின் உடலை வாங்க மறுத்து, சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்கம் சார்பில் வெள்ளியன்று காலை திருச்சி அரசு மருத்துவமனை சவக் கிடங்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத் திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா தலைமை வகித்தார். பின்னர் ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் வீராசாமி தலை மையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இறந்தவரின் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவரது குடும்பத்தாருக்கு முருகானந்தம் பணிபுரிந்த நிர்வாகத்திடமிருந்தோ அல்லது அரசிடமிருந்தோ உரிய நிவாரணத் தொகை பெற்றுத்தர முயற்சி எடுக்கப்படும் என்றும் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது வழக்கு தொடர்வது என்றும் முடிவானது.

Leave A Reply