சென்னை, மார்ச் 4 –
மகளிருக்கு 33 விழுக் காடு இடஒதுக்கீடு வழங் கும் மசோதாவை பட் ஜெட் கூட்டத் தொடரில் நிறை வேற்ற வேண்டும் என்று எல்ஐசி உழைக்கும் மகளிர் மாநாடு வலியுறுத்தி உள் ளது.
இவ்வமைப்பின் சென்னை பகுதியின் 17வது மாநாடு சனிக்கிழமையன்று (மார்ச் 3) அண்ணாசாலை எல்ஐசி வளாகத்தில் நடைபெற் றது.இம்மாநாட்டில் அத்தி யாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப் படுத்துவதோடு, விலை வாசி உயர்வுக்கு கார ணமான பெட்ரோலியப் பொருட் களின் விலை உயர்வை கை விட வேண்டும். முன்பேர வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும்,தேசநலனுக்கும், பாலி சிதாரர்களின் நலனுக்கும் எதிரான காப்பீட்டு துறை சீர்திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் நடவடிக்கை களை மத்திய அரசு கைவிட வேண்டும்.
பணியிடங்களில் பெண் களுக்கு எதிரான கொடுமை களை தடுத்து நிறுத்தும் வகையில் கண்காணிப்பு குழுக்களை அமைக்க வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற் றப்பட்டன.இந்த மாநாட்டை தமிழ் நாடு விவசாயிகள் சங்கத் தின் மாநில பொதுச் செய லாளர் பெ.சண்முகம் துவக்கி வைத்தார். தென்மண் டல காப்பீட்டு கழக ஊழி யர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.சுவாமி நாதன், காப்பீட்டு கழக ஊழியர் சங்க பொதுச் செய லாளர் எஸ்.ரமேஷ் குமார், சென்னை பகுதி-2ன் மகளிர் துணைக்குழு அமைப்பா ளர் சர்வமங்களா உள் ளிட்டோர் பேசினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.