திருச்சிராப்பள்ளி, மார்ச் 4-
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் திருவெறும் பூரில் ஆர்ப்பாட்டம் நடத் தினர்.மத்திய மின்தொகுப்பிலி ருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 2 ஆயிரத்து 800 மெகாவாட் மின்சாரத்தை உடனே வழங்க வேண்டும்; நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும், திரு வெறும்பூர், வேங்கூர், பத் தாளப்பேட்டை, காட்டூர், அசூர் ஆகிய இடங்களில் நெல்கொள்முதல் நிலையங் களை திறக்க வேண்டும், விவசாயிகள் உற்பத்தி செய் யும் நெல்லை அரசே கொள் முதல் செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கை களை வலியுறுத்தி காட்டூர் கடைவீதியில் இந்த ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
விவசாயிகள் சங்க ஒன் றியக்குழு உறுப்பினர் ஜோக் கின் தலைமை வகித்தார். சங்கிலிமுத்து, ரங்கநாதன், ராதாகிருஷ்ணன், அப்துல் மாலிக், குருநாதன், ரவிச்சந் திரன், கணேசன், மரியசெல் வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் மாசிலாமணி, மாவட் டத் தலைவர் ஆர்.நடராஜன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் தெய் வநிதி, வி.தொ.ச பழனிவேல், பாசன விவசாயிகள் சங்கத் தைச் சேர்ந்த சொக்கலிங் கம், குமரவேல் ஆகியோர் பேசினர். மரியராஜ் நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.