தினெண்கீழ்க்கணக்கு நூல் களில் முதலிடம் பெற்றுத் திகழ்வது முப்பால் எனும் திருக்குறள். அதனுடன் இணைத்துச் சிறப்பாகப் பேசப்படுவது நாலடியார். “நாலடி நான்மணி நானாற் பது…” என்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் பற்றிக் குறிப்பிடும் வெண்பா பாடல்.ஆலும் வேலும் பல்லுக் குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் பழமொழி இதன் முக்கியத்து வத்தை உணர்த்துகிறது. அத னால்தான் டாக்டர் ஜி.யு. போப் நாலடியாரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.நான்கு அடிகள் கொண்ட வெண்பாக்களால் ஆனது நாலடியார் வெண்பாவுக்கு உரிய இலக்கணத்துடன், கட வுள் வாழ்த்துச் செய்யுளுடன் சேர்த்து நானூற்று ஒரு பாடல் கொண்டது. வெண்பாவில் உள்ள நான்கு அடியில் இரண்டாவது அடியில் நான் காவது சீர் தனிச்சீராக அமைந்து வந்தால் அது நேரிசை வெண்பா என்றழைக்கப்படும். இரண் டாவது அடியில் தனிச்சீர் பெறாமல் வந்தால் இன்னிசை வெண்பா என்றழைக்கப் படும்.நாலடியாரின் கடவுள் வாழ்த்துப் பாடல் நேரிசை வெண்பாவாகும். மீதி நானூறு பாடல்களில் 304 பாடல்கள் நேரிசை வெண்பாவே. மற்ற 96 பாடல்கள் இன்னிசை வெண்பாவாகும்.
திருக்குறளைப் போலவே நாலடியார் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது. அறத்துப்பா லில் துறவறம், இல்லறம் என அரசியல், நட்பியல், இன்ப இயல், துன்ப இயல், பொது இயல், பகை இயல், பன்னெறி இயல் என ஏழு இயல்களும் உள்ளன. காமத்துப்பாலில் இன்ப இயல், துன்ப இயல் என இரண்டு இயல்களும் உள்ளன.நாலடியார் ஒரு தொகுப்பு நூலாகும். இதை பதுமனார் எனும் சமண முனிவர் தொகுத் துள்ளார். பொதுவாக பாடல் கருத்துக்கள் சமணமதக் கருத்துக்களாக உள்ளன என் றும் அதனால் இவை சமண முனிவர்களால் இயற்றப்பட் டிருக்க வேண்டும் என்றும் கூறப்படு கிறது. இது தொடர்பாக வேறொரு கதையும் வழங்கப்படு கிறது. எண் ணாயிரம் சமண முனி வர்கள் பாண்டிய மன்னனின் ஆதரவு பெற்று மதுரை யில் வாழ்ந்தார்கள். அவர்களது சொந்த நாடு செழிப்புறத்துவங்கி யதும் அங்கு செல்ல விரும்பினார் கள். ஆனால் அதை அரசன் விரும்ப வில்லை. எனினும் முனிவர்கள் தலா ஒரு பாடல் எழுதி வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். இதனால் கோபம் கொண்ட மன்னன் அந்தப் பாடல் ஏடுகளையெல்லாம் ஆற்றில் வீசச் சொன்னான். ஆற்றிலே போடப் பட்ட ஏடுகளில் நானூறு ஏடுகள் மட்டும் எதிர் நீச்சல் போட்டதாம். அதைச் சேகரித்து தொகுக்கப்பட்டதே நாலடியார் என்கிறது அந்தக்கதை.எண்ணாயிரம் சமண முனிவர் கள் பாண்டிய நாட்டில் இருந்ததும் திருஞான சம்பந்தர் மதுரை வந்த போது அனல்வாதம், புனல்வாதம் என்ற பெரியல் ஏடுகள் ஆற்றில் போடப்பட்டதும் சமண இலக்கியங் களுடன் சமண மதமும் அழிக்கப்பட் டதும் சைவமதம் அரசமதமாக ஆன தும் இலக்கிய, மத வரலாறாக உள் ளது. எண்ணாயிரம் புலவர்கள் –
சமணர்கள் மதுரையை விட்டுச் சென்று விட்டார்கள் என்பதை அவர் கள் கழுவில் ஏற்றிக் கொல்லப்பட்டு இந்த உலகத்தைவிட்டே அனுப்பப் பட்டார்கள் என்பதை திருவிளையா டல் புராணச் செய்தி வரலாறாக கூறுகிறது.“நாலடியார்” பாடல்களின் கருத் துக்களை அதன் அதிகார வகை களே உணர்த்துகின்றன. “இளமை நில்லாது, யாக்கை நிலையாது, வறுமையும் செல்வமும் வழிஒன்று சேராது” என்பது ஒரு பக்திப்பாடல். இந்தக் கருத்து நாலடியாரின் கருத்து தான். வாழ்க்கை என்பது புல்மேல் பனித்துளி போன்றது. அதனால் இருக்கிற குறுகிய காலத்துக்குள் ளேயே மற்றவர்களுக்கு உதவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.உண்மையான செல்வம் என்பது கல்விதான் என்பதை பல்வேறு பாடல் களில் கூறுகிறது. அது பிறருக்குக் கொடுப்பதால் குறையாது. அதுதான் மயக்கத்தைத் தீர்க்கும் மருந்து என்கிறது.குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்துநல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால்கல்வி யழகே அழகு (131)பொதுமக்கள் மத்தியிலே புழங் கும் சொற்களை, கருத்துக்களை பாடல்களாக வடித்திருக்கிறது நால டியார். நாய் நம்மைக் கடித்தால் நாம் நாயைத் திருப்பிக் கடிப்போமா? சினம் இன்மை அதிகாரத்தில் வரும் பாடல்“கூர்த்து நாய் கௌவிக் கொளக் கண்டும் தம் வாயால்பேர்த்து நாய் கௌவினார் ஈங்கிலை”
(70)புலி பசித்தாலும் புல்லைத் தின் னாது என்போம். ஆனால் நாலடியார் தாளாண்மை அதிகாரத்தில் பின் வருமாறு கூறுகிறது.உறுபுலி ஊன்இரை யின்றி ஒருநாள்சிறுதேரை பற்றியும் தின்னும் (193)நட்புக்கொள்ளும்போது பாக னையே கொல்லும் யானை போன்ற வர்களை விலக்கி நாய் போன்ற நன் றியுடையவரையே தேர்வு செய்ய வேண்டும் என்கிறது (213); நண்பர்க ளுக்குள் பிரச்சனை வந்தால் பொறுத் துக் கொள்ளவேண்டும் என்பதற் காக “ஒருவர் பொறை இருவர் நட்பு”(223) எனும் வாசகத்தை வழங்குகிறது.நாலடியாரில் அதிகாரத்திற்கு ஒரு பாட்டு என விளக்க முயன்றால் தாங்காது. இயலுக்கு ஒரு எடுத்துக் காட்டு சொன்னாலும் அதிகரித்து விடும்.மனம்போல் வாழ்வு என்போமே, அதை நாலடியார் ‘மனத்தனைய மக்கள் என்பார்’ (245) என்கிறது. கஞ்சர்களி டம் இருக்கும் செல்வம் கடல்நீரை ஒத்தது என்கிறது கடல்நீரையுண் ணார்(263) எனும் பாடலில்.துறவு பற்றி சிறப்பாகப் பேசும் நாலடியார், நல்ல மனைவி இல்லாத வீடு காடு போன்றது என்கிறது. “மாண்ட மனையாளை இல்லா தான் இல்லகம் காண்டற்கு அரிய தோர் காடு”(361). மற்றொரு பாடலில், மகன் அறிவு தந்தை அறிவு (367) என்கிறது.அறக்கருத்துக்கள் நிறைய கூறப் படுகின்றன. என்றாலும் நாலடியா ருக்கு வேளாண் வேதம் என்ற பெயர் வழங்கப்பட்டது என்று முனைவர் மா.கோவிந்தராசு தலைமையிலான தஞ்சை மன்னர் சரபோசி அரசுக் கல்லூரி தமிழ்த்துறைக் குழு தயா ரித்த “பொருண்மை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு”எனும் நூல் கூறு கிறது.
அதற்கு சில தனிப்பாடல்கள் ஆதாரமாக உள்ளன என்கிறது.“புல் ஈரப் போழ்தின் உழவே போல்” என்பது (115), “மலைநலம் உள்ளும் குறவன் பயந்த/ விளை நலம் உள்ளும் உழவன்…”(356) என் பது போன்ற பல பாடல்கள் அதை வழிமொழிகின்றன.சங்க இலக்கியங்களில் அந்தப் பாடல் எந்தத்துறையைச் சேர்ந்தது என்று குறிப்பிடப்பட்டிருக்கும் அல் லவா; அதைப் போல நாலடியாரின் மூன்றாம் இயலில் உள்ள 14 பாடல்களுக்கு அத்தகைய குறிப்புக் கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.பொதுவாக நீதி இலக்கியத்தின் காலம் ஆறாம் நூற்றாண்டு வரை என்கிறார்கள். ஆனால், நாலடியா ரின் காலம் ஏழாம் நூற்றாண்டின் நடுப்பகுதியாக இருக்கலாம் என் கிறார் பேராசிரியர் எஸ்.வையாபுரி யார். முத்தரையர்கள் எனும் சிற்றரசர் கள் பற்றிய குறிப்பு இரண்டு பாடல் களில் வருகிறது.“பெருமுத்தரையர் பெரிதுவந் தீயும்…(200)”, “மல்லன்மா ஞாலத்து வாழ்பவருள் எல்லாஞ்/ செல்வ ரெனினுங் கொடாதவர் நல்கூர்ந்தார் / நல்கூர்ந்தக்கண்ணும் பெருமுத் தரையரே/ செல்வரைச் சென்றிரவா தவர்(206)” என்கிற பாடல்கள் குறிப் பிடும் முத்தரையன் பல்லவ மன்ன னின் கீழ் குறுநில மன்னாக இருந்த வனையே சுட்டுகிறது என்கிறார் வையாபுரியார்.கி.பி.ஏழாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் அரசாட்சி செய்த முத லாம் பரமேசுவரவர்ம பல்லவ னுக்கு பெரும்பிடுகு என்று ஒரு பெயர் வழங்கி வந்தது. இவன் கீழ் இருந்த குறுநில மன்னன் முத்தரை யனும் சிறப்புப் பெயராக பெரும்பிடுகு முத் தரையன் என வழங்கப்பட்டான் என்பது பொருத்தம் என்கிறார்.
பழைய நாலடியார் உரை ஒன்று ‘பெருமுத்தரையர் எனும் சிறப்புப் பெயர் பெற்ற செல்வர் பெரிதும் காத லித்து ஈயும் கருனை’ என்று கூறு வது இதனை வலியுறுத்துகிறது என்கிறார். பிடுகு என்பது பிற மொழிச் சொல் என்பதால் அதைத் தவிர்த்துவிட்டு பெருமுத்தரையர் என்று குறிக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார். எனவே நாலடியார் பாடல்கள் உத்தேசமாக கி.பி.650ல் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்றும் கி.பி. 700 அளவில் தொகுக் கப்பட்டிருக்க வேண்டும் என்றும் வையாபுரியார் கூறுவது சரியென்றே படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.