நாமக்கல், மார்ச் 4-
நாமக்கல் அருகே ஞாயிறன்று அதிகாலை பாலத்தில் சென்ற கார் நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதி பள்ளத்தில் உருண்டது. இதில் திருமணத் திற்கு சென்ற 6 பேர் பரிதாபமாக உயிரி ழந்தனர். இரண்டு பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் திருமூர்த்தி (40) வழக்கறிஞர். இவரது உறவினர் இல்ல திருமணம் பரமத்தி வேலூரில் ஞாயிறன்று காலை நடைபெறவிருந்தது. இதற்காக சேலம், ராசி புரத்தில் உள்ள உறவினர்கள் இணைந்து செல்லத் திட்டமிட்டனர். இதற்காக நேற்றிரவு வழக்கறிஞர் திருமூர்த்தி, இவரது மனைவி கற்பகம் )35), மகன் பால விக்னேஷ் (14), மாமியார் சம்பூரணம் (52) ஆகியோர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணத்தை சேர்ந்த உறவினர் ராமசாமி (55) வீட்டுக்குச் சென்றனர். அங்கு மற்றொரு உறவினர் , சேலம் அடுத்துள்ள திருவனப் பட்டியைச் சேர்ந்த இரும்பு வியாபாரி சுப்பிரமணி (5), இவரது மனைவி கமலம் (50), மகன் கிருஷ்ணன் (30) ஆகியோர் வந்தனர்.
அங்கிருந்து நேற்றிரவு திருமூர்த்தி, சுப்பிரமணி குடும்பத்தினருடன் ராமசாமி அவரது மனைவி சரஸ்வதி (50), மகன் முத்துக்குமார் (எ) ராஜா (32) ஆகியோர் நாமக்கல் சென்றனர். அங்கு ஒரு ஓட்ட லில் அறை எடுத்து தங்கினர். அன்று அதிகாலை 9 பேரும் ஒரு காரில் பரமத்தி வேலூர் புறப்பட்டனா. சேலம் – கரூர் முதலைப்பட்டி பைபாஸ் ரோட்டில் கார் சென்றது. காரை வழக்கறிஞர் திருமூர்த்தி ஓட்டிச் சென்றார்.அதிகாலை 5.30 மணியளவில் முத லைப்பட்டி பைபாஸ் சாலையிலிருந்து அடுத்த 3 கி.மீ தொலைவில் உள்ள நல்லி பாளையம் பைபாஸ் அருகே பாலத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார் சென்டர் மீடியனில் மோதியது.இதில் நிலை தடுமாறி ரோட்டில் கவிழ்ந்த கார் பல்டி அடித்தபடி பாலத் தில் இருந்து விழுந்து சர்வீஸ் ரோட் டையும் கடந்துசென்றது. கார் குட்டிக் கரணம் அடித்ததில் 9 பேரும்அலறி கூச்சல் போட்டனர்.
கார் நொறுங்கியது. காரில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி ரத்த வெள்ளத்தில் துடித்தனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கம் இருந்தவர்கள், அந்த வழியே வாகனங் களில் சென்றவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.காரில் சிக்கிக் கிடந்தவர்களை ஒவ்வொருவராக வெளியே மீட்டனர். இதில் திருமூர்த்தி, சம்பூரணம், சரஸ்வதி உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந் தனர். மற்றவர்கள் உயிருக்கு போராடினர். அவர்களை மீட்டு நாமக்கல்லில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பால விக்னேஷ், சுப்பிரமணி, கமலம் ஆகியோர் உயிரிழந்தனர். இதில் கிருஷ்ணன் மட்டும் லேசான காயத்து டன் தப்பினார். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.