கோவை, மார்ச் 4-புதிதாக தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள் கொடீசியாவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விளக்கமளிக்கப்பட்டது.கொடீசியா சார்பில் சிறு தொழில்கள், புதிய தொழில்கள் தொடங்குவதில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி கோவை ஓசூர் ரோட்டில் உள்ள கொடீசியா அரங்கில் நடைபெற்றது. இதில் ஏராளமான தொழில் முனைவேர்கள் கலந்து கொண்டு ஆலோசனை பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கொடீசியாவின் முன்னாள் தலைவர் வி. ரங்கநாதன் தொழில் முனைவோரின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசியதாவது:புதியதாக தொழில் தொடங்குவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. தொடங்கிய தொழில்களில் வெற்றி பெற அனுபவம், புதிய அணுகுமுறை, அனுபவம் வாய்ந்தவர்களை அணுகி நல்ல ஆலோசனைகளை பெறவேண்டும். புதிய தொழில்களானால் அதன் தேவையை அறிந்து தொழில்களை தேர்வு செய்ய வேண்டும். மேலும் நமது பலம், பலவீனம் அறிந்து, பலவீனத்தை போக்க வாய்ப்புகளை அறிந்து செயல் படவேண்டும்.
முதன் முதலாக உற்பத்தி தொழிலை மேற்கொள்வோர்கள் முதலில் உற்பத்தி செய்த பொருட்களுக்கு ஏஜென்சி எடுத்து, அந்த பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் அப்பொருட்களை மதிப்பீடு செய்வதை அறியலாம். பொருட்களின் விற்பனை மூலம் சரியான லாபம் கிடைத்தால் மட்டுமே தொழிலை தொடங்கவேண்டும். இவ்வாறு ரங்கநாதன் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் தொழில் வல்லுனர்கள் பலர் கலந்து கொண்டு, தொழில் தொடங்குவதற்கான சிறந்த ஆலோசனைகளை தொழில் முனைவோருக்கு வழங்கினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.