சீயோல், மார்ச் 4-
தென்கொரிய ஜனாதி பதி லீமயுங் – பாக். உள் ளிட்ட தலைவர்களுக்கு எதி ரான ஆர்ப்பாட்டம் வட கொரிய தலைநகர் பியாங் யாங்கில் வலுவுடன் நடத் தப்பட்டது. இதில் வட கொரிய மக்கள், கம்யூ னிஸ்ட் தொண்டர்கள், ராணுவத்தினர் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.வடகொரிய ஜனாதிபதி கிம்மையும் அவர் குடும்பத் தினரையும் தென்கொரியா வசைபாடுகிறது என்றும் டிசம்பரில் கிம் ஜோங் இல் இறந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்த தென் கொரியா தவறிவிட்டது என்றும் வடகொரியா மக் கள் தென் கொரியத் தலை வர்களை விமர்சித்து வரு கின்றனர்.பரந்துபட்ட கிம் இல் சுங் சதுக்கத்தில் விரல்கள் மடக்கிய கைகளை உயர்த் தியபடி, கிம் ஜோங்இல், கிம் இல் சுங் ஆகியோரின் புகைப்படங்களை உயர்த் தியபடி தென்கொரிய தலை மைக்கு எதிராக முழக் கங்கள் எழுப்பினர்.தென்கொரியாவும், அமெரிக்காவும் கொரியக் கடலில் போர்ப்பயிற்சி நடத்தி வருகின்றன. அது படைப்பயிற்சி அல்ல, படையெடுப்புக்கான பயிற்சி என்று வடகொரியா வெளியுறவுத்துறை கூறியது. தென் கொரியத்தலைவர்கள் பேச்சுவார்த்தைகளை நிராகரிக்கின்றனர் என்றும் போரை தூண்டிவிடுகின்ற னர் என்றும் வடகொரிய மக்கள் கருதுகின்றனர்.

Leave A Reply