தூத்துக்குடி, மார்ச் 4-
தென்காசி வழியாக கேரளாவுக்கு கடத்தப்பட இருந்த 6 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் வெள்ளி யன்று பிடிபட்டன.
இது தொடர்பாக தூத்துக்குடி யைச் சேர்ந்த ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.இதையடுத்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு விஜயேந்திர பிதரி உத் தரவுப்படி கள்ளநோட்டு கும்பலை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனை நடத்தி வந்த நிலையில் தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருப்பதி, சப்-இன்ஸ்பெக் டர் தர்ம ராஜ், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ஆடி வேல் மற்றும் போலீசார் வெள்ளியன்று நள்ளிரவு தென்காசி புதிய பஸ் நிலை யம் முன்பு வாகன சோத னையில் ஈடுபட்டனர். அப் போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.
அவ ரிடம் கத்தை கத்தையாக ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுகள் இருந்தன. மொத் தம் 597 நோட்டுகள் இருந்தன.அவற்றை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத் தினர். அப்போது அந்த ரூபாய் நோட்டுகள் அனைத் தும் கள்ள நோட்டுகள் என் பதை கண்டுபிடித்தனர். அதனை கொண்டு வந்தவர் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் மாசானம் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 46) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து ராஜேந்தி ரனை போலீசார் கைது செய்து, கள்ள ரூபாய் நோட் டுக்களையும் பறிமுதல் செய் தனர். இதுபற்றி எஸ்.பி. விஜயேந்திர பிதரி கூறிய தாவது:கைது செய்யப்பட்டு உள்ள ராஜேந்திரன், கள்ள நோட்டு கும்பலுடன் நெருங் கிய தொடர்பு உடையவர், இவர் ஏற்கனவே கள்ள நோட்டு வழக்குகளில் சிக்கி உள்ளார். பிரபல கள்ள நோட்டு தயாரிப்பாளரான தூத்துக்குடியைச் சேர்ந்த குருமூர்த்தி என்பவருடன் கடந்த 6 ஆண்டுகளாக சேர் ந்து கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டு உள்ளார்.ராஜேந்திரன் மீது ராம நாதபுரம் கியூ பிராஞ்ச் போலீ சில் போதை பொருள் கடத் திய வழக்கும், 5 மாதங் களுக்கு முன்பு வாசுதேவ நல்லூர் போலீஸ் நிலையத் தில் குருமூர்த்தி மீது கள்ள நோட்டு வழக்கும் போடப் பட்டுள்ளது.
ராஜேந்திரன் தென்காசி வழியாக கேரளாவுக்கு இந்த கள்ள நோட்டுகளை கடத்தி செல்ல முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந் துள்ளது. இந்த நோட்டுகள் ஈரோட்டில் தயாரிக்கப் பட்டு தென்காசிக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. கள்ள நோட்டுகளை பெட்ரோல் பங்க், ஓட்டல்கள், நில விற் பனை தொழிலில் பயன் படுத்தி புழக்கத்தில் விடுகின் றனர். சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பயன் படுத்த கொண்டு வரப்பட் டதா? என்று தெரிய வில்லை.நெல்லை மாவட்டத்தில் கள்ள ரூபாய் நோட்டு புழக் கத்தை தடுக்க தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டு வருகி றோம். இதுவரை மொத்தம் 43 லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகள் பிடிக்கப்பட்டு உள்ளன. கள்ளநோட்டு கும் பலை பிடிக்க தனிப்படை போலீசார் தூத்துக்குடி மற்றும் ஈரோடு மாவட்டங் களுக்கு சென்று உள்ளனர். இவ்வாறு நெல்லை மாவட்ட எஸ்பி விஜயேந்திர பிதரி கூறினார்.மேலும், தற்போது சிக்கி யுள்ள கள்ள ரூபாய் நோட் டுக்கள் பொதுமக்கள் மற் றும் வங்கி ஊழியர்களால் எளிதில் கண்டு பிடிக்க முடி யாத வகையில் தயாரிக்கப் பட்டு உள்ளன. அதாவது ரிசர்வ் வங்கி குறிப்பிட்டு உள்ள பாதுகாப்பு அம்சங் கள், வாட்டர் மார்க் உள் ளிட்ட பல்வேறு அம்சங் கள் இந்த கள்ள நோட்டு களில் இருக்கின்றன. அதாவது இதுவரை பிடிபட்ட நோட்டுக்களை விட, தற்போது பிடிபட்ட கள்ள நோட்டுகள் கூடுதல் தரமானதாக உள்ளது.
இத னால் அவற்றை கள்ள நோட் டுதான் என்று கண்டுபிடிப்ப தில் சிரமங்கள் இருந்தன. ஆனாலும் 2 சிறப்பு அம் சங்கள் அதில் இல்லாததை வைத்துதான் அவைகள் கள்ள நோட்டுகள் என் பதை உறுதி செய்தோம் என்று எஸ்பி விஜயேந்திர பிதரி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: