திருவாரூர், மார்ச் 4-
திருவாரூர் மாவட்டத் தில் உலக மகளிர் தின விழா வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் சிறப் பாக நடத்துவதற்கான கலந் தாய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் சி.நடராசன் தலைமையில் நடைபெற் றது. இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் மாவட்ட அள விலான அலுவலர்களும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களும், மாவட் டத்தில் உள்ள ஊராட்சி அளவிலான குழுக்கூட்ட மைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
மகளிர் தினவிழாவில் பேரணி, கையேந்தி பதாகை கள் தயாரிப்பு, சிறப்பான முறையில் செயல்பட்டு சாதனை புரிந்த மகளிர் களின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு பரிசுகள் வழங்குதல், கலாச் சார நிகழ்ச்சிகள் நடத்து தல், மகளிர்களின் உரிமை கள் தொடர்பான கலந் தாய்வு, இரத்ததானம் உள் ளிட்ட மருத்துவ முகாம் நடத்துதல், மாற்றுத்திற னாளி மகளிர்களின் சாதனை மகளிர்களை கவுரவித்தல், உழைப்பால் உயர்ந்த மகளிர் களின் வெற்றிக்கதைகளை பெற்று சிறந்த மகளிர்களை தேர்வு செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
புதுமையான நிகழ்வுகள் மூலம் தனித்து வம் பெற்ற மாவட்டமாக திருவாரூர் மாவட்டம் திகழ வேண்டும் என இக்கூட் டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.திருவாரூர் மாவட்டத் தில் திருராமேஸ்வரம், எடையூர், சரபோஜிராஜ புரம், ஆவூர், வடுவூர் அக்ர ஹாரம், அம்மையப்பன், கோட்டூர், குன்னூர், தண் டலை ஆகிய ஊராட்சிகளி லும், நன்னிலம் பேரூராட்சி யிலும் பேரணி உள்ளடக் கிய மகளிர்தின விழா மார்ச் 6 மற்றும் 7ம் தேதிகளில் கொண்டாடுவது எனவும், மாவட்ட அளவிலான உலக மகளிர் தின விழா பேர ணியை மார்ச் 8ஆம் தேதி திருவாரூரில் நடத்துவது எனவும் இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.