தனியார் செவிலியர்களின்நியாயமான போராட்டம்
அண்மையில்தான் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் பயிற்சிநிலை செவிலியர்களுடைய போராட்டம் நடைபெற்றது. இப்போது, மூன்று பெரும் தனியார் மருத்துவ மனைகளின் செவிலியர்கள் போராட்டக் களத் தில் இறங்கியிருக்கிறார்கள். தங்களுக்குக் குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.15,000 வழங் குதல், ஆண்டுதோறும் ரூ.2,500 ஊதிய உயர்வு அளித்தல், இரவு நேரப்பணிக்கும் கூடுதல் பணிக்கும் கூடுதல் படி தருதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அவர்களது போராட்டத்தில் முன்வைக்கப்படுகின்றன.அரசு மருத்துவமனைகளை உயர்ந்த தரத் துடன் பேணுவதிலும் சேவைகளை வலுப் படுத்துவதிலும் அரசு எந்திரம் போதிய அக்கறை காட்டாத நிலையில் பல நோயாளிகள் தனியார் மருத்துவ மனைகளையே நாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஓரளவு வருவாய் உள்ளவர்களும் தனியார் மருத்துவ மனைகளுக்குச் செல்லவேண்டிய சூழல் உரு வாக்கப்பட்டிருக்கிறது.
மருத்துவச் சுற்றுலா என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்படும் திட்டங் களில் பெரிதும் பயன்பெறுகிறவை தனியார் நிறு வனங்களே.இன்றைய வர்த்தகமயச் சூழலில், மருத்துவ மும் இவ்வாறு பெரும் தனியார் நிறுவனங்களின் தொழிலாகியிருக்கிறது. சில நிறுவனங்கள் மருத் துவக் கல்வி நிறுவனங் களாகவும், உலகளாவிய தொடர்புகளோடும் வளர்ந்திருக்கின்றன. இந்த நிறுவனங்களின் இப்படிப்பட்ட வளர்ச்சியில் மருத் துவர்களின் திறமையோடு, செவிலியர்க ளின் உழைப்புக்கும் முக்கியமான பங்களிப்பு இருக்கிறது. சிகிச்சை பெறுவோரும் மற்றவர் களும் ஏற்றுக்கொள்கிற இந்த உண்மையை, அந்தந்த நிர்வாகங்கள் அங்கீகரிக்கவில்லை என்பதுதான் கொடுமை.
அதிகபட்சமாக செவிலியர்களுக்கு ரூ.6,200 மட்டுமே வழங்கப்படுகிறது என்பதிலிருந்தே எப்படிப்பட்ட உழைப்புச் சுரண்டல் நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். இதில், சுமார் ரூ.1,500 விடுதிக்கட்டணமாகப் பிடித்துக்கொள் ளப்படுகிறதாம். எந்த நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டிய ஊழியர்களுக்குப் பாதுகாப் பான தங்கும் வசதியைச் செய்துதர வேண்டிய கடமையை நிறைவேற்ற மனமில்லாமல், இப்படி கொடுக்கிற ஊதியத்திலிருந்தே விடுதிக் கட்டணம் பிடிக்கப்படுவது என்ன நியாயம்?சிகிச்சை பெற வருகிறவர்களிடமிருந்து ஈவி ரக்கமில்லாமல் கட்டணங்களை வசூலிக்கிற நிலையில், இருக்கிற தனியார் நிர்வாகங்கள் தங்களது முக்கியமான சேவை ஊழியர்களை இத் தகைய நிலையில் வைத்திருப்பது சிறிதும் ஏற் கத்தக்கதல்ல. இவர்களுடைய பிரச்சனை ஊதி யம், கூடுதல் பணி நேரத்திற்கான படிகள் போன் றவை மட்டுமல்ல. குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துகொள்வது, இடையில் வேறு வாய்ப்புகள் வந்தால் அதைப் பயன்படுத்திக் கொள்ள விடாமல் சான்றிதழ் களைக் கைப்பற்றி வைப்பது போன்ற “கார்ப்ப ரேட் குணங்களும்” இருக்கின்றன.
தனியார் மருத்துவமனை வர்த்தகம் செழிக் கக் கொள்கை ரீதியாகத் துணை செய்யும் மத்திய -மாநில அரசுகளுக்கு இவர்களது பிரச்சனை யில் தலையிட வேண்டிய பொறுப்பு இருக்கிறது. மாநிலம் முழுக்க போராட்டம் பரவுவதற்குள் அரசு எந்திரம் தலையிட்டு சரியான தீர்வு கிடைக்கச் செய்ய வேண்டும் என்பது செவிலி யர்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, திடீரென வெடித்துள்ள இந்தப் போராட்டத்தைக் கவனிக் கிற அனைவரின் விருப்பமுமாகும்.

Leave A Reply

%d bloggers like this: