ஆங்கில, ஐரோப்பிய நாடகங்க ளில் தனித்து அணுகப்பட வேண்டிய நாடகாசிரியர் பெர்டோல்ட் பிரெக்ட், குறிப்பாக நவீன நாடகத்தில் ஈடுபட்டுவந்துள்ள அனை வரும் பிரெக்ட் நாடகங் களில் மிகுந்த அக்கறை காட் டியுள்ளனர். உருவம், உள்ள டக்கம் , நடிப்புக்கோட்பாடு, நாடகக் கொள்கை, அரங்க அரசியல் ஆகிய பல தளங்க ளில் பிரெக்ட் குறித்த விவா தங்கள் தமிழில் இடம் பெற்றுள்ளன. பிரெக்டின் அந்நியப்படுத்தும் கோட் பாடு, நமது மரபுக்கலைகளில் பாத்திரம்- நடிகர் ஆகியோ ருக்கு இடையிலான நுண் ணிய இழையைப் புரிந்து கொள்ள உதவுகிறது. அதோடு, நாட்டிய சாத்திரம் விளக்கும் ரசங்கள் குறித்த கோட்பாட்டிற்கும் நெருக்க மானதாக உள்ளது. பார் வையாளர்களோடு நேரடிப் பகிர்தலைச் சாத்தியப்படுத் தும் கூற்றுமுறையும் பிரெக் டை நெருக்கமாக்கி யது எனலாம்.தமிழில் பிரெக்டின் வெளிப்பாட்டை நாட்டார் கலைகளோடு, குறிப்பாகத் தெருக்கூத்தோடு இணைத் துப் பார்த்த முயற்சியைக் கூத்துப்பட்டறை முன்னி றுத்தியது. கூத்துப்பட்டறை மேடையேற்றிய “வெள்ளை வட்டம்” நாடகத்தில் புரிசை சம்பந்தம் பங்கேற்றார். இரா சேந்திரன் இயக்கத்தில் உரு வான நாடகம் இது.
அதைத் தொடர்ந்து புரிசை கண்ணப்ப தம்பிரான் கூத்துக்குழுவும் “வெள்ளைவட்டம்” நாடகத்தை பிரெக்டின் ஐம்பதாவது நினைவு ஆண்டில் முழுஇரவுக் கூத்தாக மேடையேற்றியது. “நல்லவள்” நாட கம் ஜெர்மானிய இயக்குநரின் வழி காட்டலில் கூத்துப் பட்டறை யால் நிகழ்த்தப்பட்டது. ஆண், பெண் இரு பாத்திரங்களிலும் மிகுந்த கலைநயத்துடன் கலைராணி பங் கேற்ற நாடகமாக இது அமைந்தது.பிற குழுக்கள், நெறியாளர்கள் ஆகியோர் பிரெக்ட் நாடகங்களை அதன் அரசியல் உள்ளடக்கத்தை முதன்மைப்படுத்திக் கையிலெடுத்தனர். மு. ராமசாமியின் இயக்கத்தில் தி.சு. சதாசிவம் மொழிபெயர்ப்பில், “கலிலியோ”நாடகம் மிகுந்த வரவேற் பைப் பெற்றது. சதாசிவம் மொழி பெயர்ப்பில் வெளிவந்ததுள்ள “தாய்” நாடகம் இன்னும் மேடையேற்றம் பெறாமல் உள்ளது. ஆடுகளம் குழுவினர் “காட்டுநகரம்” நாடகத்தை 1992ல் மேடையேற்றினர். ஞாநி, வட்டம் பெயரில் சமகால நிகழ்வு களின் விளக்கமாக பிரெக்டை மேடையேற்றினார்.பிரெக்டின் “தி எக் செப்டின் அண்ட் திரூல்” நாடகத்தைப் பல் கலை அரங்கம் மேடையேற்ற முனைந்தபோது, குழு மொழி பெயர்ப்பில் ஈடுபட்டது.
இளைய பத்மநாதன் வழிகாட்டலில் நிகழ்த் துதலுக்கான வடிவத் தேவைகளை மனதில் இருத்தி, பிரெக்டின் கோட் பாடுகளை தன்வயப்படுத்திய பனு வலாக ஒரு பயணத்தின் கதை உரு வானது. முழுக்க முழுக்க வசந்தன் கூத்து மெட்டுகளில், வட்டக் களரியில் நடிகர் குழுவின் பங்கேற் போடு மொழிபெயர்ப்பில் ஈடுபட்ட முயற்சி இது. அந்த வகையில் இம் மொழி பெயர்ப்பு அழமான, புதிய அணுகுமுறையைத் தமிழில் அறி முகப்படுத்திய நூலாகிறது.பிரெக்டைத் தவிர சார்த்தின் “மீளமுடியுமா” பாகீரதி நாராயணன் இயக்கத்தில் 1986ல் உருவானது. பிரெஞ்சு மொழியில் இருந்து நேரடியாக இதனை ஸ்ரீராம் மொழி பெயர்த்துள்ளார். பெக்கெட்டின் “எப்போ வருவாரோ” எஸ்.எம்.ஏ. ராம் மொழிபெயர்ப்பில் வெளி வந்தது. ஜே. பி. பிரிஸ்ட்லின் “ஒரு விசாரணை” மொலியரின் இரு நாட கங்கள் (மொ. பெ. கே.எஸ்வேங்க டராமன்) இப்செனின் இரு நாடகங் கள் (மொ. பெ. எம்.ஏ துரை ரங்க சாமி) ஆகியவை வெளிவந்துள் ளன. இதில் ப்ரிஸ்ட்லியின் “ தி இன்ஸ் பெக்டர் கால்ஸ்” நாடகத்தை எஸ்.வி. சகஸ்ரநாமம் குழுவினர் சத்தியசோதனை என்ற பெயரில் மேடையேற்றியதாகத் தகவல் கிடைக்கிறது.மேஜிக் லேன்டர்ன் குழுவினர் மொலியரின் வயசவயககந நாடகத்தில் “வேலைக்காரி” என்ற பெயரில் பல இடங்களில் நிகழ்த்தினர்.
1975 “பிரக்ஞை” இதழில் காம்யூவின் “நியாயவாதிகன்” நாவலை அடிப் படையாகக் கொண்ட நாடகம் ஜுலை முதல் டிசம்பர் வரை வெளி யிடப்பட்டது. நெருக்கடி நிலைச் சூழலில் பேசமுடியாத அரசியல் நிலைமையைப் பேசுவதற்கு இந்நா டகம் முகாந்திரமாக அமைந்தது என வீராசாமி நேரடிப் பேச்சில் குறிப்பிட்டார்.ஆலிவர் ஹெய்லியின் “மிருகம்” எம்ஐஜி குழுவினரால் வேலுசரவ ணன் இயக்கத்தில் மேடையேறியது. ஆடுகளம் செகாவின் “வார்டு எண். 6” நாடகத்தையும், சுதேசிகள் எட்வர்ட் பாண்ட்டின் “கல்மனிதன்” நாடகத் தையும் முத்ரா காஃப்காவின் “விசாரணை”என்ற நாவலைத் தழுவிய நாடகத்தையும் மேடையேற்றின. கூத்துப்பட்டறை மாக்ஸ்ஃப்ரிஷ் அவர்களின் “அன்டோரா”, காம்யு வின் “காலிகுலா”, “நிரபாராதிகளின் காலம்”, பிராண்டெலோவின் “ஆறு கதாபாத்திரங்கள்”, வோல்ஃப் கங் ஹலட்ஸ் ஹைமரின் “ஹெலனா வின் தியாகம்”, வால்டர் ஏரிஷ்ஹே பர் அவர்களின் “மகாத்மா காந்தி யின் கடைசி ஐந்து விநாடிகள்” போன்ற நாடகங்களை மேடையேற்றியது. இம்மேடையேற்றங்கள் குறித்த தகவல்களை நாடகவெளி இதழ்களில் காண முடிகிறது. கூத் துப் பட்டறையின் இந்தநாடகங்கள் அனைத்துமே ஜெர்மன், பிரெஞ்சு பண்பாட்டு நிறுவனங்களில் மேடையேற்றப்பட்டன. அரங்கத் திற்குத் தேவையான புரவலர்களாக வெளிநாட்டுத் தூதரகங்களின் பண்பாட்டு மையங்கள் செயல்படு வதன் விளைவாக இவற்றைக் காண லாம். தமிழில் இவை உருவாக் கிய சலனங்கள் குறித்த ஆய்வு இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. வேற்று மொழி நாடகாசிரி யர்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு அளித்தன என்பதைத் தவிர இம் மேடையேற் றங்கள் தமிழ்ச்சூழல், சமகால இருப்பு குறித்த கேள்விகள் எதனை யும் கிளப்பவில்லை. பிரெக்ட் நாட கங்களுக்குப் பிறகு அத்தகைய அசைவை ஏற்படுத்தியது ளடிபே டிக டிறநnடி வின் தமிழ் மேடையேற்றம் எனலாம். இன்றும் கூத்துப் பட் டறையோடு இணைந்து பணியாற்ற வரும் இயக்குநர்கள் மொழி பெயர்ப்பு நாடகங்களை நமக்குத் தருகின்றனர். மேற்கூறிய அனைத்தும் நமக்கு முன் உள்ள தரவுகள். இவற்றுள் இலக்கியப் பனுவல்களாக மட்டும் இருப்பவை; மேடை நிகழ்வுகளாக் கப்பட்டவை எனப் பிரித்து அணுக வேண்டியது அவசியம். மேடை யேறியவற்றுள் நிகழ்த்துதலில் தமிழ்ச்சூழலோடு பொருந்தியவை, வேறொரு பண்பாட்டை அறிமுகப் படுத்துபவையாக நின்றவை என மீண்டும் பிரிக்க வேண்டியுள்ளது. மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, மேடையேற்றம் கண்ட நாடகங்கள், மூலப் பனுவல் கிளர்த்திய உணர்வெழுச்சி, முன்வைத்த வடிவ உத்திகள், அறிமுகப்படுத்திய கோட் பாடுகள் குறித்தப் புரிதலோடு உருவாக்கப்பட்டனவா? என்றும் பார்க்க வேண்டியுள்ளது.இம்மொழிபெயர்ப்பு நாடகங் கள் எவ்வளவு தூரம் தமிழ் நாடகத் துறை, இலக்கியத்துறை மாணவர் களுக்கு அறிமுகமாகியுள்ளன என்ற கேள்வியைக் கிளப்பவேண்டிய தேவை உள்ளது.
இதன் மறுபக்க மாகத் தமிழ் நாடகங்கள் குறித்த அறிமுகம் எவ்வளவு தூரம் பிற மொழிகளில் பதிவாகியுள்ளது என்ற கேள்வியையும் எழுப்ப வேண்டும். அதோடு நாடகத்துறையில் ஈடுபடு வர்கள் உலகந்தழுவிய அளவில் மிகப்பெரிய வீச்சுகளை ஏற்படுத் தும் ஆப்பிரிக்க, ஆஸ்திரேலிய, கனடிய பூர்வகுடி நாடகங்கள் பக்கம் திரும்பாமல் கூட இருப்பது நமது துரதிர்ஷ்டம்.நாடகம், மொழிபெயர்ப்பு ஆகிய இரு துறைகள் சார்ந்த ஆய்வுகள் இவற்றைக் கணக்கில் கொண்டு செறிவான பார்வையை வழங்கும் என நம்பலாம்.-
‘நாடகப் பனுவல் வாசிப்பு’ -நூலிலிருந்து..

Leave a Reply

You must be logged in to post a comment.