புதுக்கோட்டை, மார்ச் 4-
புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட் டத்தின் கீழ் 9,10ம் வகுப்பு ஆசிரியர்களுக்கான ஐந்து நாள் புத்துணர்வுப் பயிற்சி முகாம், புதுக்கோட்டை யை அடுத்து சுபபாரதி ஆசி ரியர் பயிற்சி நிறுவனத்தில், பிப்ரவரி 29ம்தேதி துவங் கியது.
முகாமை மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர் சுகுமார் தேவதாஸ் தொடங்கி வைத்தார். 160 பெண் ஆசிரியர்கள் உட் பட 210 பேர் கலந்து கொண்ட னர். இம்முகாமில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், சோலை என ஐந்து குழுக் களாகப் பிரித்து, பல்வேறு தலைப்புகளில் தமிழகத்தில் உள்ள பல்வேறு தமிழறி ஞர்கள், கவிஞர்கள், எழுத் தாளர்களைக் கொண்டு வகுப்புகள் எடுக்கப்பட் டன.அரசு ஆசிரியர்பயிற்சிக் கல்லூரி முதல்வர் முனைவர் ம.அன்புச் செழியன், ‘ஞானா லயா’ பா.கிருஷ்ணமூர்த்தி, பத்திரிகையாளர் மதுக்கூர் இராமலிங்கம், சாகித்திய அகாதெமி ஆலோசனைக் குழு உறுப்பினர் கவிஞர் தங்கம்மூர்த்தி, முனைவர் கள் வெற்றிச்செல்வன், மு. பழனியப்பன், அ.செல்வ ராசு, ச.மாதவன், இரா. கலைச்செல்வி, பேராசிரி யர்கள் திராவிடராணி, அ.விமலா, மதுரை சூரியன் பண்பலை நிகழ்ச்சித் தயா ரிப்பாளர் ஸ்டீபன், பெரி யாரியல் அறிஞர் நெடுஞ் செழியன், புலவர் மு.பால சுப்பிரமணியன், கவிஞர் வி.கே.கஸ்தூரிநாதன், புல வர் மா.நாகூர், கவிஞர்கள் ஜீவி, ஆர்.நீலா, ரமா.ராம நாதன், ராசி.பன்னீர்ச்செல் வன், இரா.தனிக்கொடி, பொன்.கருப்பையா உள்ளிட்டோர் பயிற்சி யளித்தனர்.
சனிக்கிழமையன்று நிறைவு விழா நடைபெற் றது. விழாவில் அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் வெ.தமிழரசு, மாவட்ட உத வித்திட்ட ஒருங்கிணைப் பாளர் முனைவர் ரெ.கனக சபாபதி, சுபபாரதி கல்வி நிறுவனங்களின் தலைவர் குரு.தனசேகரன் மற்றும் செயலர் பேரா.வீ.வைத்தி யநாதன் ஆகியோர் உரை யாற்றினர்.முகாமிற்கான ஏற்பாடு களை ஒருங்கிணைப்பா ளர்கள் நா.முத்துபாஸ்கரன், கு.ம.திருப்பதி, மகா.சுந்தர், சுப.கோபிநாத், மற்றும் ராஜேந்திரன், ரெத்தின குமார் ஆகியோர் செய்தி ருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: