கோவை, மார்ச் 4- கோவையை அடுத்த ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள காமாட்சிபுரம் கோவில் முன்பு சிலர் சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் பேரில்சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சேவல் சூதாட்டம் நடத்திய அதே பகுதியை சேர்ந்த முருகேசன், பால்ராஜ், முருகேஷ், சம்பத் ஆகிய 4 பேரையும் கையும் களவுமாக பிடித்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.