சென்னை, மார்ச், 4 –
இந்தியாவில் 75 விழுக் காடு பேருக்கு சட்ட விழிப் புணர்வு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி ஜி.எம்.அக்பர்அலி வேதனை தெரிவித்தார்.பெண் வழக்கறிஞர்கள் சங்கம், பெரம்பூர் வடக்கு பகுதி வியாபாரிகள் சங்கம், பெரம்பூர் ரமணா நகர் சுற் றுவட்டார வியாபாரிகள் நலச்சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய சட்ட விழிப்புணர்வு முகாம், பெரம்பூரில் உள்ள ஈஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமை தொடங்கி வைத்து உயர் நீதிமன்றம் நீதிபதி ஜி.எம். அக்பர்அலி பேசியதாவது:-அரசு, நீதிமன்றம், காவல் துறை போன்ற அனைத்து துறைகளும் தங்களுக்காகத் தான் என்பது மேல்தட்டு வர்க்கத்தின் எண்ணம். இந்த மூன்று துறைகளின் செயல் பாடு சவுகரியமாக இருக்கி றது என்பது நடுத்தர வர்க் கத்தின் மேல்தர மக்களின் கருத்து.
ஆனால் நடுத்தரத் துக்கும் கீழ்ப்பட்ட மக்க ளுக்கு அதிருப்திதான் உள்ளது.ஏழை, எளிய மக்களுக் கும் கீழே ஒரு வர்க்கம் உள் ளது. அவர்கள் சமுதாயத் தால் கைவிடப்பட்டு, ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள வர்கள். சட்டத்தின் ஆட்சி முழுமையாக நடக்கிறது என்று கூறவேண்டுமானால், இந்த கீழ்த்தட்டு மக்கள் வரை சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு சென்றடைந் திருக்க வேண்டும்.இந்தியா சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகளில் எழுத்தறிவு 67 விழுக்காடு மக்களுக்குத்தான் கிடைத் துள்ளது. இவர்கள் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் மட்டுமே. உயர் கல்வி பெற் றவர்களின் எண்ணிக்கை 12 சதவீதம்தான். சமுதாயத் தின் கீழ்த்தட்டு மக்களின் எண்ணிக்கை, ஜனத்தொகை யில் மூன்றில் 2 பங்கு உள் ளது.
சுதந்திரம் கிடைத்து 75 சதவீத மக்களுக்கு சட்ட விழிப்புணர்வும், சட்டம் பற்றிய அறிவும் இல்லை.நீதி ஒருவேளை தாமத மாகலாமே தவிர, அது கிடைக்காமல் இருக்காது. தற்போது உயர்நீதிமன்றத் திற்கு வரும் வழக்குகளின் எண்ணிக்கை உயர்வதை பார்க்கும்போது, நீதியின் மேல் மக்களுக்குள்ள நம் பிக்கை வளர்வது தெரிகிறது. மக்களின் நம்பிக்கையை நீதிபதிகள் காப்பாற்றி வருகின்றனர்.இவ்வாறு அவர் பேசி னார்.தமிழ்நாடு வணிகர் சங் கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் பேசும் போது, பிரதிவாதிகளுக்கு தெரியாமல் வாதிகள் எக்ஸ் பார்ட்டி உத்தரவுகளை பெறுவதன் மூலம், பலரது நிலைமை கடினமாகிவிடுகி றது. பிரதிவாதிக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்று சேர விடாமல் தடுத்து, அந்த வகையில் தீர்ப்புகளை வாங் கும் நிலை தவிர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

Leave A Reply