காஜியாபாத், மார்ச் 4 –
தேசிய ஊரக சுகாதாரத் திட்ட ஊழலுக்கு நான் காரணமல்ல. இத் திட்டம் சார்ந்த இறுதி முடிவுகளை உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி தான் எடுத்தார் என கைதான முன் னாள் மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் பாபு சிங் குஷ்வகா, சிபிஐ நீதிபதியிடம் சனிக்கிழமை இரவு கூறினார். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு 2 முக்கிய கமிட்டிகள் அமைக்கப்பட் டன. இந்த இரண்டிலும் நான் தலை வராக இல்லை. ஒரு கமிட்டித் தலை வராக முதல்வர் மாயாவதியும் மற் றொரு கமிட்டி தலைவராக மாநில தலைமைச் செயலாளரும் இருந்தனர். முதல்வர் மாயாவதியின் முடிவே, இறுதி முடிவாக எடுக்கப்பட்டது.
தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்திற்கு எந்த நிதி ஒதுக்கீட்டையும் நான் மேற்கொள்ளவில்லை என, நீதிமன் றத்தில் முன்னாள் அமைச்சர் தெரிவித் தார்.ஊரக திட்ட ஊழலில் இணைக் குற்றச்சாட்டு நபரான ராம்பால் சிங் ஜெய்ஸ்வால் நீதிமன்றத்தில் கூறுகை யில், தனது தனியார் நிறுவனங்கள் தேசிய ஊரக சுகாதாரத்திட்ட நிதி களை உறிஞ்சவில்லை என்றார். குடும்ப நலம் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பதவியில் இருந்து குஷ்வகா நீக்கம் செய்யப்பட்ட நிலை யில், பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து, பாஜகவுக்கு தாவினார். உத்த ரப்பிரதேசத்தில் 7 கட்ட சட்டசபைத் தேர்தல் நிறைவடைந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து அவர் நீக்கப் பட்டார். குஷ்வகாவையும் ராம் பிரசாத் ஜெய்ஸ்வாலையும் சிபிஐ, சனிக் கிழமை கைது செய்தது. தேசிய ஊரக சுகாதாரத்திட்ட ஊழலில் கைது செய்யப்பட்ட முதல் அரசியல் தலை வர் குஷ்வகா ஆவார். இந்தத் திட்டத் தின்படி மத்திய அரசு உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு ரூ.10ஆயிரம் கோடிக் கும் மேல் தரப்பட்ட நிதியில் ஊழல் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.இதுவரை இத்திட்ட ஊழல் தொடர்பாக மாநில நல்வாழ்வுத்துறை முன்னாள் இயக்குனர் எஸ்.பி.ராம், மாநில பொதுத்துறை (கட்டுமானம் – வடிவமைப்பு பணி) பொது மேலாளர் பி.கே.ஜெயின், ஷுட்ரன் இந்திய லிமிடெட் இயக்குனர் ஜி.கே.பத்ரா உள்பட 10 பேரை சிபிஐ இதுவரை கைது செய்துள்ளது.முன்னதாக குஷ்வகாவையும், ஜெய்ஸ்வாலையும் விசாரணை செய்ய தனது தலைமை அலுவலகத்திற்கு அழைத்த மத்திய புலனாய்வுக்கழகம் 4 மணி நேரம் கேள்விகள் கேட்டு, பின்னர் கைது செய்தது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் 134 மாவட்ட மருத்துவமனைகளை தரம் உயர்த்தும் ரூ.13.4 கோடி கட்டுமான, வடிவமைப்பு பணியில் ஊழல் செய்ததாக குஷ்வகா மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.காஜியாபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் போலியான, மோசடியான ஆவணங்களை தந்துள்ளது. மருத்துவ மனைகளில் தரம் குறைந்த பொருட் கள் பொருத்தப்பட்டு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என சிபிஐ செய்தித் தொடர்பாளர் தாரிணி மிஸ்ரா கூறினார்.ஊரக சுகாதாரத் திட்ட ஊழலில் இதுவரை 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் கட்டுமானத் தரத்தை உயர்த்துவதற்கு காஜியாபாத் தின் சர்கியோ கோய்ன் தனியார் நிறு வனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப் பட்டது.
ஊரக சுகாதாரத்திட்ட ஊழலில் அமைச்சர் (குடும்ப நலம்) குஷ்வகா, அப்போதைய முதன்மைச் செயலா ளர் (குடும்ப நலம்) பிரதீப் சுக்லா மற்றும் பல்வேறு நிலையில் உள்ள ஊழியர்கள் தனியார் ஒப்பந்தத்தாரர் களிடம் ரகசிய கூட்டுச் சதி செய்ததற்கு முகாந்திரம் இருப்பதை சிபிஐ கண்டறிந்துள்ளது.ரூ.13.4 கோடியில் கட்டுமான தரம் உயர்த்தும் பணிகளில் ரூ.5.46 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தாரணி மிஸ்ரா கூறினார்.ஊழலில் சிக்கியுள்ள தனியார் நிறுவனத்திற்கு, பல ஒப்பந்தங்கள் தரப்பட்டுள்ளதும் தெரியவந்துள் ளது.

Leave A Reply

%d bloggers like this: