திருப்பூர், மார்ச் 4-திருப்பூரில் அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் சிவில் நீதிபதி போட்டித் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் வெள்ளியன்று இந்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
சிவில் நீதிபதி போட்டித் தேர்வு எழுதும் வழக்கறிஞர்களுக்கு நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பில் வழக்கறிஞர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்,பொன்ராம் துவக்கி வைத்தார்.
வழக்கறிஞர்களுக்கு அரசு உதவி வழக்கறிஞர் திரிஸ்ரீபவன் மற்றும் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.நடராஜன் ஆகியோர், தேர்வை எப்படி எதிர்கொள்வது, மொழிபெயர்ப்பு, குற்றவியல் சட்டங்கள், இலவச சட்ட உதவி மற்றும் மக்கள் நீதிமன்ற நடைமுறைகள் ஆகியவை குறித்து விளக்கிக் கூறினர்.சனிக்கிழமையும் இந்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் நீதிபதிகளும், அரசு வழக்கறிஞர்களும் பயிற்சி தந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: