மதுரை, மார்ச் 4-
மதுரையில் பணிபுரியும் 400க்கும் மேற்பட்ட பொறியாளர்கள், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாதது தமிழக நெடுஞ்சாலைத்துறையில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
சம்பளம் வழங்கும்வரை தொடர்போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் மதுரையில் 9 அலகுகள்(யூனிட்) செயல்பட்டு வருகின்றன. மதுரை அழகர் கோவில் ரோட்டில் உள்ள ஜெ.ஜெ.மாளிகை, கற்பகநகரில் உள்ள அலுவலகங்கள், மாவட்ட நீதிமன்றம் அருகேஉள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், காந்திநகர், வில்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த அலுவலகங்கள் செயல் பட்டு வருகின்றன. 1000 கி.மீ தூரத்திற்கான சாலைகளை பராமரிப்பது, பாலம் கட்டுவது, போக்குவரத்து கட்ட மைப்பு வசதிகளை செய்து தரும் அரசுப்பணியில் 400 க்கும் மேற்பட்ட பொறியாளர்கள், ஊழியர்கள் பணி புரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு மாதச் சம்பளம் வழங்கப்படாததால் தொடர் போராட்டத்தைத் துவக்கியுள்ளனர்.
நெடுஞ்சாலைத்துறை நிர்வாகச் சீரமைப்பு மற்றும் வலுப்படுத்துதல் தொடர்பாக கடந்த 12.10.2010 அன்று ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. அரசு அலுவலகங்களை மாற்றியமைப்பது தொடர்பாகவும் ஊதி யம் வழங்கப்படுவது தொடர் பாகவும் இந்த ஆணை வெளியிடப்பட்டது.இந்த அரசாணை தான் தற்போது மதுரை நெடுஞ் சாலைத்துறையில் பணிபுரி பவர்கள் சம்பளம் பெறுவ தில் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆணை யின்படி தான் தற்போது வரை தலைமைப்பொறியா ளர் அலுவலகம் முதல் பிரிவு அலுவலகம் வரை 31 மாவட்டங்களில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் மதுரையில் மட் டும் இந்த ஆணையின்படி சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. மதுரையில் உள்ள சம் பளக்கணக்கு அலுவலகத் தில், இந்த அரசாணை தற் காலிகமானது தான். நிரந் தரம் இல்லை எனக்கூறி இந்த அரசாணையின் காலம் ஓராண்டோடு முடிந்து விட் டதால், புதிய ஆணை வந்தால்தான் சம்பளம் வழங்கப்படும் என கடந்த 3 மாதங்களுக்கு முன்பே பிரச்சனை ஏற்பட்டது.இதுகுறித்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கம் சார்பில் முதன்மை இயக்குநரிடம் முறையிடப்பட்டது. நிரந் தர ஆணை பெற்றுத்தருகி றேன் என்ற அவரது கடிதத்தின் அடிப்படையில் கடந்த 2 மாதங்களாக மதுரையில் உள்ள 400 க்கும் மேற்பட்ட பொறியாளர்கள், ஊழியர் கள் சம்பளம் பெற்று வந்தனர்.
இந்நிலையில் 3வது மாதச் சம்பளத்தை நிறுத்த முயற்சி நடைபெற்றது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை தலைமை அலுவலகத்திற்கு ஊழி யர்கள் மற்றும் பொறியா ளர்கள் தந்தி அனுப்பினர். முதன்மை இயக்குநர், அரசுடன் கடிதப்போக்குவரத்து வைத்துள்ளேன் என்று மீண்டும் மதுரை சம்பளக் கணக்கு அலுவலகத்திற்கு கடிதம் எழுதியதன் அடிப்படையில் 3 வது மாதச்சம்பளம் வழங்கப்பட்டது.
நிரந்தர ஆணை பெறுவ தாகக் கூறப்பட்டாலும் அரசு நடவடிக்கை இல்லாத காரணத்தால் மதுரையில் 9 அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பிப்ரவரி மாதச்சம்பளம் வழங்கப்படவில்லை. இத னால் மதுரை நெடுஞ்சாலைத் துறையில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் மனநிலை கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அனைத்து மாவட்டத்திற்கும் பொருந்தும் வகையில் ஒரு அரசாணையை வெளியிடாத காரணத்தால் பல மாதங்களாக இப்பிரச்சனை தொடர்ந்து கொண்டி ருக்கிறது. நிரந்தர ஆணை வரும்வரை தினசரி போராட் டம் நடத்துவதென நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டு மதுரை கண் காணிப்பு அலுவலகம் முன்பு முதல் கட்டப்போராட்டத்தைத் துவக்கியுள்ளனர்.
மதுரை, தேனி, இராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களும் இப்போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர். அடுத்தகட்டமாக உண்ணாவிரதம், தர்ணா போராட்டம் உள்ளிட்டஅனைத்துப் போராட்டங்களையும் நடத்த நெடுஞ் சாலைத்துறை ஊழியர்கள் தயாராகி வருகின்றனர்.
-ப. கவிதா குமார்

Leave A Reply

%d bloggers like this: