சென்னை, மார்ச், 4 –
சென்னையில் சனிக்கிழ மையன்று நடந்த சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் தொடர் பான முத்தரப்பு பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை பேசியும் இந்தப் பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படவில்லை.தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல்லை தலைமையிட மாக கொண்டு சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் இயங்கி வருகின்றன. வாடகை கட்டணத்தை உயர்த்துதல், புதிய டெண் டர் குறித்த பேச்சு, புதிய எல்.பி.ஜி.டேங்கர் லாரிக ளுக்கு அனுமதி அளித்தல் போன்றவற்றை நிறைவேற் றித் தருவதாக அளித்த உறுதி மொழியை எண்ணெய் நிறுவனங்கள் நிறைவேற்றக் கோரி டேங்கர் லாரிகளின் உரிமையாளர்கள் கடந்த மாதம் 29 ந் தேதி நள்ளிரவில் இருந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள் ளனர்.
இதன்காரணமாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் கியாஸ், லாரிக ளில் எடுத்துச் செல்லப்படு வது தடைபட்டு உள்ளது.
சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, வீடுகளுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்வதில் 30 நாட்களுக்கு மேல் காலதாமதமாகிறது.கியாஸ் டேங்கர் லாரி கள் வேலைநிறுத்தம் கார ணமாக தமிழகம், கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சமையல் கியாஸ் தட்டுப்பாடு ஏற் படும் அபாயம் உருவாகி உள்ளது.
இந்தப் பிரச்ச னைக்கு தீர்வு காண தமிழக அரசு அதிகாரிகளும், எண் ணெய் நிறுவன அதிகாரிக ளும் முயற்சி மேற்கொண் டுள்ளனர்.இந்த நிலையில், கியாஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தமிழக அரசு சார்பில் சேப் பாக்கம் எழிலக கட்டிடத் தில் உள்ள உணவுபொருள் வழங்கல் மற்றும் நுகர் வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் பஷீர் அகமது தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.இதில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் செயல் இயக்குனர்கள் ஜெயச்சந்தி ரன், சத்வந்த்சிங், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரே ஷனின் செயல் இயக்குனர் ஆர்.எல்.குப்தா, போக்கு வரத்துத் துறை இணை செயலாளர் பன்னீர்செல் வம், தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. லாரி உரிமையா ளர்கள் சங்க தலைவர் எம். பொன்னம்பலம் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். பகல் 12 மணிக்கு தொடங் கிய இந்தப் பேச்சுவார்த்தை இரவு வரை நீடித்தது. இரவு 8 மணி வரை பேச்சுவார்த் தையில் உடன்பாடு எட் டப்படவில்லை.

Leave A Reply

%d bloggers like this: