இந்தியாவில் அமெரிக்க சிறப்புப்படை நிலை கொண் டுள்ளது – அமெரிக்க ராணுவத்துறை தகவல்.
ச.சா – காங்கிரஸ், பாஜக மாறி, மாறி ஆட்சிக்கு வந்தா சிறப்புப் படை என்ன… முழுப்படையே வந்து உக்காந்துக்கலாம்…* * *
யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் உத்தரப் பிரதேசத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி – காங். பொதுச் செயலாளர் திக்விஜய் சிங்.
ச.சா – உங்களுக்குச் சாதகமான நிலைமை இல்லேனா… அப்படித்தானே…??* * *
இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணியின் அலுவலகத் தொலைபேசி ஒட்டுக்கேட்பு – செய்தி.
ச.சா – ராணுவ தளவாடங்கள் வாங்குற வேல நடக்கு துல்ல… பன்னாட்டு நிறுவனங்களோட சதியா இருக்கலாம்…* * *
ஆளும் கட்சிகளுக்கு சிறந்த எதிர்க்கட்சியாக இருந்துவரும் ஒரே கட்சி மதிமுக மட்டும்தான் – மதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்.
ச.சா – நாசகர இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் வந்தப்ப ஒபாமா புகழ் பாடுனீங்ளே…

Leave a Reply

You must be logged in to post a comment.