சென்னை, மார்ச், 4 –
சங்கரன்கோவில் (தனி) சட்டப்பேரவை இடைத்தேர்த லில் தேமுதிக வேட்பாளர் முத்துக்குமாரை ஆதரித்து அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் 6 நாள்கள் பிரசாரம் மேற்கொள்கிறார்.இது தொடர்பாக சனிக்கிழமை தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கை:-கட்சி வேட்பாளர் முத்துக் குமாரை ஆதரித்து விஜயகாந்த் மார்ச் 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களிடம் வாக்கு சேகரிக்க உள்ளார்.கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி எஸ்.ராமச் சந்திரன் மார்ச் 9-ம் தேதி பிரசாரம் செய்கிறார். பிரேமலதா விஜயகாந்த் மார்ச் 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை பிர சாரம் மேற்கொள்கிறார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.விஜயகாந்த்தும், பிரேமலதாவும் சங்கரன்கோவிலில் ஒரே நாள்களில் பிரசாரம் செய்தாலும் இருவரும் வெவ்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்கின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: