சென்னை, மார்ச் 4
சங்கரன்கோவில் இடைத் தேர்தலையொட்டி 103 பூத்கள் பதற்றம் நிறைந்த வையாக கண்டறியப்பட் டுள்ளது. இதையடுத்து அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.சங்கரன்கோவில் இடைத் தேர்தல் மார்ச் 18ல் நடக் கிறது. இங்கு 230 பூத்கள் உள்ளன. இதில் 103 பூத்கள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளது. இங்கு தற்போது ஆயிரம் காவல்துறையினர் பாது காப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தொகுதிக்கு வரும் வாக னங்களை கடந்த இரு வாரங் களாக காவல்துறையினர் சோதனையிட்டு வருகின்ற னர். மேலும் சங்கரன்கோவி லில் 10 கண் காணிப்பு குழு 10 பறக்கும் படையினர், 10 வீடியோ காவல் படையினர் மற்றும் 5 அதிரடிப்படையினர்,
மணிமுத்தாறு பட்டா லியனை சேர்ந்த 9வது மற் றும் 12வது பட்டாலியனை சேர்ந்த 4 கம்பெனி காவல் துறையினர், 3 கலவர தடுப்பு படையினர், வெடிகுண்டு தடுப்பு பிரிவு சிறப்பு படை யினர் ஆகியோர் பாது காப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மத்திய, மாநில உளவுத் துறையினரும் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர். சங்கரன்கோவில் இடைத் தேர்தலையொட்டி முதற் கட்டமாக மத்திய ரிசர்வ் காவல் படையின் 650 வீரர் கள் நவீன ஆயுதங்களுடன் சங்கரன்கோவிலுக்கு வர விருக்கின்றனர்.இந்நிலையில் சங்கரன் கோவிலில் இடைத்தேர்தல் நடைபெறும் நாள் நெருங் குவதாலும் கட்சிகளுக்கி டையே பலத்த போட்டி நிலவுவதாலும் ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடக் கூடாது என்பதற்காக பாது காப்பு பணியில் கூடுதல் காவல்துறையினரை நிய மிக்க முடிவு செய்துள்ளனர்.
மதுரையில் தென் மண் டல மாவட்ட கண்காணிப் பாளர்கள் மற்றும் காவல் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஏடிஜிபி ஜார்ஜ், சங்கரன் கோவில் தேர்தலில் பாது காப்பு பணியில் கூடுதல் காவல்துறையினரை ஈடு படுத்தவும், தென் மாவட்ட எஸ்பிக்கள் எந்த நேரத்தி லும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கூறினார். மேலும் காவல்துறையில் சாதாரண போலீஸ் முதல் உயர் அதிகாரிகள் வரை யாருக்கும் 30ம்தேதி வரை விடுமுறை அளிக்ககூடாது எனவும் உத்தரவிட்டார்.இதனைத்தொடர்ந்து நெல்லை மாநகரத்திலிருந்து முதற்கட்டமாக ஆயுதப் படை காவல்துறையினர் மற்றும் காவல் நிலையங்க ளிலிருந்து 300 காவல்துறை யினர், 100 ஊர்க்காவல் படையினர், 100 என்சிசி மாணவர்கள் ஆகியோர் சங்கரன்கோவிலுக்கு செல்லவிருக்கின்றனர்.இதுபோன்று தூத்துக் குடி, கன்னியாகுமரி, விருது நகர் மாவட்டங்களை சேர்ந்த காவல்துறையின ரும் தேர் தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளதாக வும், கூடுதலாக 3 கம்பெனி மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரை கேட்டு கடி தம் எழுதப்பட்டுள்ளதாக வும் காவல் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: