சங்கரன்கோயில் இடைத்தேர்தல் 2012 மார்ச் மாதம் 18 ல் நடைபெறவுள்ளது. நான்கா வது முறையாக அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அமைச்சராகவும் இருந்த கருப்பசாமி அவர் கள் நோய்வாய்ப்பட்டு, மரணமடைந்ததால் ஏற்பட்ட காலியிடத்துக்கான தேர்தல் இது. பெரும்பான்மை பலத்துடன் அ.தி.மு.க. தமி ழகத்தில் ஆட்சியிலிருக்கின்ற நிலையில் இத்தேர்தல் முடிவு தமிழக அரசி யலில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவ தில்லை. கடந்த 20 ஆண்டுகளாக நடை பெற்ற அனைத்துத் தேர்தலிலும் இத்தொகு தியில் அ.தி.மு.க. தான் தொடர்ந்து வெற்றி பெற் றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. பொதுவாக தமிழகத்தில் ஆட்சியிலிருக் கும் கட்சிகளே இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நிலையே உள்ளது. ஆட்சியதிகாரம் ஆளும் கட்சிக்கு ஆதரவாகப் பயன்படுத்தப் படுவதும், பணம் தண்ணீராகப் பாய்ச்சப்படு வதும் தமிழக இடைத்தேர்தல்களில் மக்கள் கண்ட காட்சிகளே. தி.மு.க ஆட்சியின்போது ‘திருமங்கலம் பார்முலா’ பிரசித்திப் பெற்ற ஒன்று. இந்த பார்முலாவை அ.தி.மு.க.வும் பின் பற்ற தயாராகி விட்டதையே 30க்கும் மேற் பட்ட அமைச்சர்கள் அங்கு பொறுப்பாளர்க ளாகப் போடப்பட்டு, அந்த சிறிய தொகுதியில் முகாமிட்டுள்ளதிலிருந்து தெரிய வருகிறது.
ஏற்கனவே இலவச ஆடுகள், இலவச மாடு கள், விலையில்லா மின்விசிறி, கிரைண்டர், மிக்ஸி என அனைத்தும் அத்தொகுதியில் மட்டும் மக்களைச் சென்றடைந்துவிட்டன எனத் தகவல்கள் கூறுகின்றன.தமிழகம் முழுக்க மின்தடையால் மக்கள் இருளில் அழும் போது சங்கரன்கோயில் மக்கள் தற் சமயம் வெளிச்சத்தில் வைக்கப்பட்டுள்ளனர். மார்ச் 18க்குப் பிறகு மீண்டும் இருளைத்தான் அவர்கள் அனுபவிக்க வேண்டி வரும். தோல்வி பயத்தினால் இத்தனையும் செய்து வரும் அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா சட்டமன்றத் தில் சவால் விட்டது வேடிக்கையான ஒன்று.சங்கரன்கோயில் இடைத்தேர்தலில் பத் துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் நான்கு பேர்தான். அவர்கள், அ.தி.மு.க, தி.மு.க, தே.மு.தி.க, ம.தி.மு.க. வேட் பாளர்கள். வகுப்புவாதக் கட்சியான பா.ஜ.க வேட்பாளர் வெற்றி முகத்தில் இருப்பதாக அதன் மாநிலத் தலைவர் கூறியுள்ளது மிகப் பெரிய ஜோக்.
இந்நிலையில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தே.மு.தி.க வேட்பாளரை ஆதரிப்பது என்று முடிவெடுத்துள்ளது. இம் முடிவு இன்றைய சூழலில் ஆழ்ந்து பரிசீ லித்து மாநிலக்குழுவால் எடுக்கப்பட்ட முடிவு.அ.தி.மு.க, தே.மு.தி.க, மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல கட் சிகளின் துணையோடு 2011 சட்டமன்ற தேர் தலைச் சந்தித்தது. அந்த தேர்தலில் இத்த கைய கூட்டணி பலம் இருந்த போதிலும் சங் கரன்கோவில் தொகுதியில் சுமார் 10000 வாக் குகள் வித்தியாசத்தில் தான் அ.தி.மு.க. வெற்றி பெற முடிந்தது. தி.மு.க ஆட்சியினால் மக்களுக்கு எற்பட்ட பாதிப்புகள், தி.மு.க அர சின் மக்கள் விரோத கொள்கைகள், தி.மு.கவி னரின் மாபெரும் ஊழல்கள், கட்டப்பஞ்சாயத்து, நிலப்பறிப்பு செயல்கள், மக்களை வாட்டி வதைத்த விலைவாசி உயர்வு, தமிழகத்தை இருளில் தள்ளிய மின்தடை போன்றவை களும், அ.தி.மு.க அணியின் கூட்டணி பல மும் தி.மு.க. ஆட்சியை இழக்கவும், படு தோல்வி அடையவும் காரணமாக அமைந் தன. தி.மு.க ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி செய்து வந்த பிரச்சாரமும், இயக்கங்களும் மக்கள் மத்தியில் பெரும் தாக் கத்தை ஏற்படுத்தியிருந்தது. அவைகளெல் லாம் கடந்த சட்டமன்ற தேர்தலில் மிகப் பெரிய கூட்டணி பலத்துடன் தேர்தலைச் சந் தித்த அ.தி.மு.கவிற்கு பெரும் வெற்றியைத் தேடித்தந்தது.
இதை மறந்து சட்டமன்றத்தில் ஜெயலலிதா ஏதோ தங்களது மகிமைக்காக மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர் என்று தம்பட்டமடித்தார். அது1996லும்,2006லும் மக்கள் தந்த கடும் தோல்வியை மறந்து பேசும் வாய்ஜாலம் என்பதை மக்கள் அறிவர். அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர் எடுத்த நடவடிக்கைகள், அரசின் செயல்பாடு கள் பல மக்களுக்கு முகச்சுளிப்பையே ஏற் படுத்தியுள்ளன. தலைமைச் செயலகத்தை பழையபடி இடநெருக்கடியில் விழி பிதுங்கி யுள்ள புனிதஜார்ஜ் கோட்டைக்கே கொண்டு சென்றது, அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகத்தை மூடிட முடிவு எடுத்தது, சமச்சீர் கல்விக்கு சமாதி கட்ட முயற்சித்தது போன்ற அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எடுத்த துக் ளக் பாணி நடவடிக்கைகள் மக்களை மிகவும் அதிர்ச்சியடைய வைத்தன. ஒரு சில நலத் திட்ட அறிவிப்புகள் இருந்தாலும் பஸ் கட் டணம் மிகப்பெரிய அளவு உயர்த்தப்பட்டது, பால்விலை உயர்வு, மின்கட்டணத்தை உயர்த்த முடிவு செய்து ஒழுங்குமுறை ஆணையத் தின் மூலம் அமலுக்குக் கொண்டு வரும் முயற்சி ஆகியவை மக்களை மிகவும் பாதித் துள்ளன. தி.மு.க. ஆட்சிக் காலத்தை விட மிகப்பெரிய அளவில் இன்று அமலாகிவரும் சுமார் 12 மணி நேர மின்வெட்டால் அனைத் துத் தரப்பினரும் கடும் இன்னலுக்கும், இழப் பிற்கும் ஆளாகி வருகின்றனர். ஆட்சிக்கு வந்து 3 மாத காலத்தில் மின்தடையை முற்றாக இல்லாமல் செய்வேன் என்று வாக்குறுதி அளித்த முதல்வர் ஜெயலலிதா தற்போது உற்பத்தி துவங்கினால் ஓரளவு மின்தடையைச் சமாளிக்க உதவும் என்ற நிலையிலும் கூட கூடங்குளம் அணுமின் நிலைய உற்பத்திக்கு இன்று வரை தடையா கவே உள்ளார்.
சட்டம்ஒழுங்கு மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பட்டப் பகலில் கொள்ளைகள், கொடூரமானப் படு கொலைகள், ரவுடிகளின் அட்டகாசம் என சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ள நிலை யில், காவல்துறைக்குப் பொறுப்பான முதல் வர் ஜெயலலிதா சட்டம்-ஒழுங்கைப் பராமரிக் கவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும், குற்றவாளிகளைக் கைது செய்து உரிய முறை யில் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தரவும் காவல்துறையை முடுக்கி விடுவதற்குப் பதிலாக என்கவுன்ட் டர் எனும் துப்பாக்கி வேட்டுகள் மூலம் மக் களைத் திசை திருப்பவே முயற்சித்துக் கொண்டிருக்கிறார். ஆட்சிக்கு வந்த ஆறே மாத காலத்தில் இத்தகைய மோசமான ஆட் சியை நடத்தி வரும் அ.தி.மு.கவிற்கு தங்கள் கோபத்தை, எதிர்ப்பை வெளிப்படுத்த இந்த இடைத் தேர்தல் ஒரு வாய்ப்பு. எனவே தான் மார்க்சிஸ்ட் கட்சி இத்தேர்தலில் அ.தி.மு.க. விற்கு எதிரான நிலைபாட்டை எடுக்க முடிவு செய்தது.தி.மு.கவைப் பொறுத்தமட்டிலும் அது இன்றும் மத்திய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் அங்கம் வகித்துக் கொணடு மக் கள் விரோத செயல்களுக்கு உறுதுணையா கவே இருக்கிறது. ஆட்சியிழந்த பின்னரும் பெட்ரோல் விலை உயர்வு, உர விலை உயர்வு உட்பட மக்கள் விரோத மத்திய அரசின் அங்க மாகவே அது உள்ளது. மேலும் தி.மு.க. முன் னாள் அமைச்சர்களும், பிரமுகர்களும் ஊழல், நிலமோசடி போன்ற வழக்குகளில் சிக்கி மிகவும் அம்பலப்பட்டு , மக்களிட மிருந்து அந்நியப்பட்டு நிற்கின்றனர். அ.தி. மு.க ஆட்சியின் மீதான அதிருப்தியை தி.மு.க. அறுவடை செய்ய முயல்கிறது. ம.தி.மு.க.வோ மக்களைப் பாதிக்கும் எந்த பிரச்சனையிலும் அக்கறையோ, நிலைபாடோ இல்லாமல் வெறும் இனப் பிரச்சனையைத் தூண்டி விட்டு ஆதாயம் அடையவே முயல்கிறது. ஆகவே தி.மு.க, மக்களின் ஆதரவைப் பெறும் கட்சியாக இல்லாத நிலையில் தான் உள்ளது.மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்த மட்டில் தேர்தல் உத்தி என்பது வெறும் சீட்டுகளுக் காகவோ அல்லது தங்களது வெற்றிக்காக மட் டுமோ தீர்மானிக்கப்படுகிற ஒன்றல்ல.
மாறாக கட்சியின் அரசியல் நடைமுறை உத்தியின் ஒரு பகுதியே தேர்தல் உத்தி ஆகும். நடந்து முடிந்த கட்சியின் மாநில மாநாட்டில் கூட தி.மு.க, அ.தி.மு.க வி.ற்கு எதிரான அரசியல் நிலைபாட்டை எடுப்பது என்றும், தமிழக அர சியல் சூழலுக்கு ஏற்ப இடதுசாரி மதச்சார் பற்ற கட்சிகளுடன் மக்கள் பிரச்சனைக ளுக்காக இயக்கங்களின் மூலம் ஒரு மாற்றை தமிழகத்தில் வளர்த்தெடுக்க முயற்சிப்பது என்றே முடிவெடுக்கப்பட்டுள்ளது. கடந்த உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. வுடன் மார்க்சிஸ்ட் கட்சி தேர்தல் உடன்பாடு கொண்டு உள்ளாட்சி தேர்தலை சந்தித்தது. அதன் தொடர்ச்சியாகவே இந்த இடைத்தேர் தலிலும் தே.மு.தி.க போட்டியிடும் நிலையில் அக்கட்சியின் வேண்டுகோளை ஏற்று தே.மு. தி.க வேட்பாளரை ஆதரிப்பது என்றும், இத் தேர்தலை மக்கள் பிரச்சனைகளை முன்னி றுத்தி நடத்தப்படும் போராட்டத்தின் ஒரு பகு தியாக பயன்படுத்துவது என்றும் முடிவெடுததுள்ளது.
எனவே சங்கரன்கோயில் இடைத் தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித் தும், தி.மு.க., அ.தி.மு.க.கட்சிகளின் மக்கள் விரோத கொள்கைகளையும், செயல்களையும் அம்பலப்படுத்தியும் கட்சியின் மாநிலத் தலை வர்களும், மாவட்டத் தலைவர்களும் பிரச் சாரம் செய்வர். மார்க்சிஸ்ட் கட்சியின் அணி கள் தேர்தல் பணிகளில் சிரத்தையோடு ஈடு பட்டு, மக்கள் மத்தியில் தங்கள் பிரச்சாரத்தை வலுவாகக் கொண்டு சென்று, தங்கள் அர சியல் கடமையை நிறைவேற்றுவர்.

Leave a Reply

You must be logged in to post a comment.