நாமக்கல், மார்ச் 4-
சமையல் கேஸ் ஏற்றி வரும் லாரிகளின் வாடகையைக் கூட்டுவதுடன், புதிதாக 600 லாரிகளை சமையல் கேஸ் டேங்கர்களாக பயன்படுத்த அனுமதி கோரி தென் மண்டல பல்க் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர் சங்கம் வேலைநிறுத்தம் செய்து வருகிறது.இதனால் மார்ச் 29ம் தேதி நள்ளிரவு முதல் கடந்த நான்கு நாட்களாக கேஸ் டேங்கர் லாரி வேலைநிறுத்தம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற முத்தரப்புப் பேச்சுவார்த்தையிலும் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை குறித்து சுமூக உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.இதனால் கேஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே கேஸ் சிலிண்டருக்கு பதிவு செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பதிவு செய்து, குறைந்தபட்சம் 30 நாட்களில் இருந்து 40 நாட்கள் கழித்துத்தான் சிலிண்டர் விநியோகம் நடைபெறுகிறது.
இந்த வேலைநிறுத்தம் தொடரும் நிலையில் இந்த சேவை மேலும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் நாமக்கல்லில் திங்களன்று தென் மண்டல பல்க் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர் சங்க பொதுக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவைப் பொறுத்தே வேலை நிறுத்தம் நீடிக்குமா, முடிவுக்கு வருமா என்பது தெரியவரும்.

Leave a Reply

You must be logged in to post a comment.