கொல்கத்தா, மார்ச் 4 –
திரிணாமுல் தலைமையி லான மேற்குவங்க அரசு தனது அரசியல் லாபத்துக் காக காவல்துறையைப் பயன்படுத்துகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியது. கொல்கத்தாவின் வடகிழக் குப்பகுதியில் காவல்துறை பயன்பாட்டை எதிர்த்து அப்பகுதியே சிவக்கும் வண் ணம் மிகப்பெரும் பேரணி யை சிபிஎம் நடத்தியது.வடக்கு 24 பர்கானா மாவட்டத்தின் ரஜர்ஹட் பகுதியில் நான்கு நாட்களுக் கும் சிபிஎம் தொண்டர்கள் மீது திரிணாமுல் கட்சியின் குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். அதை எதிர்த்து சிபிஎம் பேரணி நடத்தியது. பேரணி ஒரு முனையைக் கடக்க பல மணி நேரங்கள் ஆனது என்று ‘இந்து’ நாளி தழ் குறிப்பிட்டுள்ளது. பேரணிக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் பிமன்பாசுவும், மாவட்டச் செயலாளர் கௌதம் தேவும் தலைமை ஏற்றனர். அவர்களும் பிற தலைவர்களும் ஊர்வலத் தின் முன்னால் திறந்த ஜீப்பில் சென்றனர்.
ரஜர்கட் கோபால்பூர் நகராட்சி தலைவர் தபஸ் சாட்டர்ஜியைச் சிறுமைப் படுத்தும் எண்ணத்தோடு, திரிணாமுல் சட்டமன்ற உறுப்பினர் சப்யசாட்சி தத் தாவின் மெய்க்காப்பாளரின் துப்பாக்கியால் சிபிஎம் தொண்டர் ஒருவர் சுடப் பட்டார். இப்பகுதி மார்க் சிஸ்ட் கட்சியின் மிகப்பெ ரும் ஆதரவுத் தளமாகும்.சம்பவம் நடந்த மூன்று நாட்களுக்குப்பின் சட்டமன்ற உறுப்பினரின் மெய்க்காப்பாளருடைய துப்பாக்கி சாக்கடையி லிருந்து எடுக்கப்பட்டது. அது ஒரு நாடகம் என்று கூறப்படுகிறது.
சம்பவ இடத்தில் ஏராளமான காவல்துறையினர் நிறுத்தப் பட்டிருந்த போதும் ஆயுதத் தைக் கண்டுபிடிக்க காவல் துறையால் முடியவில்லை என்று கௌதம் தேவ் சுட் டிக்காட்டினார். துப்பாக்கி மீட்கப்பட்ட போது தடய வியல் ஆய்வாளர்கள் உதவி யை காவல்துறை கேட்க வில்லை என்றும் அவர் கூறினார்.ஜனநாயகம் மலரவேண் டும் என்ற எண்ணமின்றி ஒரு கட்சி ஆட்சியை நிறுவ திரிணாமுல் முயற்சிக்கிறது என்று சிபிஎம் குற்றம்சாட் டியது. மாநிலம் முழுவதும் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறையை எதிர்த்து ஊர் வலத்தினர் முழக்கமிட் டார்கள்.

Leave A Reply

%d bloggers like this: