நாகர்கோவில், மார்ச் 4-
நாகர்கோவில் வட சேரி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் மீது ஏற்கெனவே பல்வேறு திருட்டு வழக்குகள், அடி தடி வழக்குகள் உள்ளன.இந்த நிலையில் நாகர் கோவில் வடசேரி பகுதி யில் உள்ள மொபைல் போன் கடையில் நடந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்த பிரபாகரனை வட சேரி போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்திருந்தனர். காவல் நிலை யத்தில் இருந்த போது திடீரென பிரபாகரன் தப்பி ஓடினார்.
இதனிடையே வட சேரி போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த வாலி பரை விசாரித்தனர். விசார ணையில் அவர் ஏற்கனவே காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய பிரபாகரன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை மீண் டும் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: