புதுதில்லி, மார்ச் 4-
கூடங்குளம் அணுமின் நிலையத் தை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப் புகளுக்கு வெளிநாடுகளிலிருந்து பணம் வருவது தொடர்பாக மத்திய அரசு தனது விசாரணையை தீவிரப்படுத்தி யுள்ளது. ஏற்கெனவே இது தொடர் பாக நான்கு தன்னார்வத் தொண்டு நிறு வனங்கள் கண்காணிப்பின் கீழ் கொண் டுவரப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 77 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை கண்காணிக்க முடிவு செய்திருப்பதாக உயர்மட்டத்தகவல்கள் தெரிவிக்கின்றன.கூடங்குளம் அணுமின் நிலையத் திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட் டுள்ள அமைப்புகளுக்கு வெளிநாடுகளி லிருந்து பணம் வருவது குறித்தும், அந்த அமைப்புகள் உட்பட நாடு முழுவதும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட் டுள்ள தன்னார்வ அமைப்புகளின் நட வடிக்கைகள் குறித்தும் அவற்றின் நிதிப் போக்குவரத்து குறித்தும் மத்திய உள் துறை அமைச்சகத்தின் பொருளாதார உளவுப்பிரிவு சில நாட்களுக்கு முன்பு மிக முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்தியதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தக்கூட்டத்தில் சந்தே கத்திற்கு இடமான 77 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் குறித்த விபரங் கள் பரிசீலிக்கப்பட்டதாகவும், இவற் றின் நிதிப்போக்குவரத்து மற்றும் இவற் றின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர் களது விசா உள்ளிட்டவற்றை கண்கா ணிக்குமாறு பல்வேறு நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களுக்கு உத்தரவிடப் பட்டிருப்பதாகவும் அந்தத்தகவல்கள் கூறுகின்றன.இந்த உத்தரவுக்கு முன்னதாக மத் திய அரசின் பல்வேறு பாதுகாப்பு ஏஜென்சிகள், வருவாய் உளவுப்பிரிவு இயக்குநரகம் மற்றும் மத்திய பொருளா தார உளவுப்பிரிவு ஆகியவற்றின் மூலம் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது என்றும், குறிப்பாக அமெரிக்கா மற் றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து இயங்கும் சில தன்னார்வத் தொண்டு அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக விசாரிக்கப்பட் டது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்துறை அமைச்சக உளவுப்பிரிவு களின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டதாகத் தெரிகிறது.எனினும், இதுதொடர்பாக செய்தி யாளர்களிடம் பேசிய மத்திய உள் துறைச்செயலாளர் ஆர்.கே.சிங், 77 தன் னார்வ அமைப்புகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறுவது தவறா னது என்றும், வெளிநாடுகளுடன் தொடர்புடைய 12 அல்லது 13 இந்திய தன்னார்வ அமைப்புகள் எங்கிருந்து நிதி பெற்றுள்ளன, அந்த நிதியை எதற்கு செலவழித்துள்ளன என்பது குறித்து விசாரிக்கப்பட்டது எனத்தெரிவித்தார்.(பிடிஐ)

Leave A Reply

%d bloggers like this: