ஓசூர், மார்ச் 4-
ஓசூர் அதியமான் கல் லூரியில் கிருஷ்ண கிரி மாவட்ட சதுரங்க சங்கம் கேடிசிஏ சார்பில் 7 நாட்கள் சதுரங்க போட்டிகள் நடை பெற்றது.
அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வர் ரங்கநாத் சதுரங்கப் போட்டியைத் துவக்கி வைத்தார். சங்க நிறுவனர் கண்டாடி முன் னின்று நடத்தினார். இந்தப் போட்டிகளில் 9 வயதுக்குட்பட்ட பிரிவில் 136 பேர் கலந்து கொண்டனர். சென்னை, காஞ்சி புரம், திருவள் ளூர், திருச்சி, மதுரை, கோவை, திருநெல் வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், வேலூர், சேலம் ஆகிய மாவட்டங்களிலி ருந்து மாண வர்கள் கலந்து கொண் டனர். புள்ளிகள் தர வரிசையில் ஆண், பெண் இரு பால ரிலும் 10 பேர் வீதம் தேர்வு செய்யப்பட் டனர். அதிலும் மிக அதிகப் புள்ளிகள் பெற்ற 9 பேர் அக் டோபரில் டெல்லியில் தேசிய அளவில் நடை பெற இருக்கும் உலகத் தரவரி சைக்கான போட்டியில் கலந்துகொள்ள தேர்ந் தெடுக்கப் பட்டனர்.
சதுரங்கப் போட்டியில் கலந்து கொண்ட அனை வருக்கும் சான்றிதழ்களும், சிறந்த 8 வீரர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது. அதிய மான கல்லூரி நிர்வாகம் விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் அனைத்து வசதி களும், உதவிகளும் செய்து கொடுத்து உற் சாகப்படுத்தியது.

Leave A Reply