திருச்சிராப்பள்ளி, மார்ச் 3-
பாமரர்களும் புரிந்து கொள்ளும்படி பத்திரிகை நடத்தியவர் சி.பா.ஆதித்த னார் என்று திருச்சியில் நடந்த கருத்தரங்கில் ‘தீக்க திர்’ நாளிதழின் பொறுப் பாசிரியர் மதுக்கூர் இராம லிங்கம் குறிப்பிட்டார்.சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம் சார்பில் “இலக்கிய வளர்ச்சியில் தமிழ் இதழ் கள்” என்ற தலைப்பிலான 4 ஆம் ஆண்டு கருத்தரங்கம் திருச்சி தூயவளனார் தன் னாட்சி கல்லூரியில் சனிக் கிழமை காலை நடைபெற் றது.
கருத்தரங்கிற்கு முனை வர் நெடுஞ்செழியன் தலை மை தாங்கினார். முனைவர் இளையராஜா அறிமுக வுரையாற்றினார். கருத்தரங் கில் ஆய்வுநூல், மின் – நூலை தூயவளனார் கல் லூரி கலைமனைகள் அதி பர் முனைவர் ஜான்பிரிட்டோ வெளியிட மின்நூலை பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி முதல்வர் கௌதமன் பெற் றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார். ஆய்வுநூலை “தீக்கதிர்” நாளிதழின் பொறுப்பாசிரியர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம் பெற்றுக்கொண்டு உரை யாற்றினார்.அப்போது அவர் பேசிய தாவது:
ஆதித்தனார் நாம் யாருக் காக பத்திரிகை நடத்துகி றோம் என்பதை தெரிந்து நடத்தியவர். பத்திரிகையில் வெளியிடப்படும் செய்தி கள் பாமரர்களும் படித்து புரிந்து கொள்ள வேண்டு மென்று கருதி அதற்கேற் றாற்போல் பத்திரிகை நடத் தியவர். தகவல் தெரிவித்தல், பயிற்றுவித்தல், விழிப்பு ணர்வு ஏற்படுத்துதல், பொழுதுபோக்கு என்ற நான்கு அம்சங்களை கொண் டதாக பத்திரிகைகள் உள் ளது. மக்களாட்சியின் ஒரு பகுதியாகத்தான் பத்திரிகை கள் உள்ளன. திராவிட இயக்கம், தேசிய இயக்கம், பொதுவுடைமை இயக்கம் இதழியல் துறைக்கு செய்த பங்களிப்பு ஏராளம். அறிவி யலுக்கு என்று ‘புதிய உல கம்’ என்ற தனி பத்திரிகை யையே துவங்கினார் சிந்த னைச் சிற்பி சிங்காரவேலர். அவருக்கு நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள் ளோம், மதுரையில் எழுத் தாணிக்காரத்தெரு என்று ஒரு தெரு உள்ளது. தமிழை வளர்க்கும் பொருட்டு அங்கு ஓலைச்சுவடிகளில் இலவசமாக பிரதி எடுத்து தந்துள்ளனர்.
கணினியோடு ஓலைச்சுவடியை இணைத்தால் தமிழ் வள ரும். நமது நாட்டில் இரண்டு மக்கள், இரண்டு இலக்கி யம், இரண்டு இந்தியா உள் ளது நீங்கள் யார்பக்கம்? என்பதுதான் கேள்வி!ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி மற்றும் வீரத்தை கற் றுக் கொள்ளக் கூடாது என் பதற்காகவே ஏகலைவனின் கட்டை விரலை குருதட் சணையாக துரோணர் கேட்டார்.
ஆனால் தூயவள னார் கல்லூரி மற்றும் ஈ.வெ.ரா. கல்லூரிகள் ஏராளமான ஏகலைவன்களை உருவாக் கும் கல்லூரிகளாக இருந்து வருகின்றன.இவ்வாறு மதுக்கூர் இராமலிங்கம் பேசினார்.கருத்தரங்கின் முடிவில் முனைவர் வாசுதேவன் நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: