கடந்த மார்ச் 1ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றம் ஒரு முக்கியமான சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையும் செனட் சபையும் விவாதித்து வாக்கெடுப்பு நடத்தி இந்த சட்டத்தை ஜனநா யகப் பூர்வமாகவே நிறைவேற்றியிருக்கின்றன. பிரதிநிதிகள் சபை யில் இரண்டே இரண்டு பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தார்கள். செனட் சபையில் ஒரு உறுப்பினர் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆளும் ஜனநாயகக் கட்சியும், எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியும் ஒருமித்த குரலில் ஜனநாயகப் பூர்வமாக நிறைவேற்றிய இந்தச்சட்டம், அமெரிக்காவில் குடிமக்களின் ஜனநாயக ரீதியிலான போராட்ட உரிமையை முழுமையாக ஒடுக்குவதற்கு அரசுக்கு அதி காரம் அளிக்கும் மிகக்கொடூரமான, ஜனநாயக விரோதமான சட்ட மாகும். எச்.ஆர்.347 அல்லது “அமெரிக்கக் கூட்டரசின் பாதுகாக்கப் பட்ட கட்டிடங்கள் மற்றும் மைதானங்கள் மேம்பாட்டுச்சட்டம் 2011” என்பதே சட்டத்தின் பெயர். இந்தச்சட்டத்தின்படி அமெரிக்காவின் எந்தப்பகுதியிலும் இனி மேல் எவரும் போராட்டங்கள் நடத்த முடியாது. கொடிகளோடு கூடி கோஷம் போட முடியாது. மீறினால் உடனடியாக கைது செய்யப் படுவார்கள்.
சிறையிலடைக்கப்படுவார்கள். அவர்களுக்கு நீண்ட கால அளவிற்கு சிறைத்தண்டனை உள்பட கடுமையான தண்டனை கள் கொடுக்கும் அளவிற்கு ஒரு கடும் குற்றமாக இது பதிவு செய் யப்படும்.அரசால் நிர்வகிக்கப்படும் பொது இடங்கள், பூங்காக்கள், மைதானங்கள், தடை செய்யப்பட்ட பகுதிகள் என எங்கும் போராட் டங்கள் நடத்துவதற்கு இச்சட்டம் தடை விதிக்கிறது.ஜனாதிபதி முதல் அரசின் கீழ்மட்ட உயரதிகாரி வரை யாருக்கெல்லாம் உளவுப்பிரிவினரின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அளிக்கப் படுகிறதோ அவர்களின் வருகைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவது, கூடுவது போன்றவையும் தடை செய்யப்படுகிறது.
அந்தோ பரிதாபம்!
2011 ம் ஆண்டு முழுவதும் அமெரிக்க தேசம் கொந்தளிப்புமிக்க போராட்டங்களைக் கண்டது. தங்களது வாழ்வாதாரத்தைச் சூறை யாடிக் கொழுக்கும் பெரும் கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளின் தலைமையிட மாக விளங்கும் வால்ஸ்ட்ரீட்டை கைப்பற்றுவோம் என்ற முழக்கத்துடன் லட்சக்கணக்கான அமெரிக்க இளை ஞர்கள் அணிதிரண்ட போராட்டங்கள்.நியூயார்க்கின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் வால்ஸ்ட்ரீட்டுக்கு எதிராக நடைபெற்ற இந்தப்போராட்டம் அமெரிக்காவின் அனைத்துப்பகுதிக ளுக்கும் பரவியது. உலகம் முழுவதிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகரங்களில் எதிரொலித்தது. லட்சோப லட்சம் இளைஞர்கள் முதலாளித்துவத்தின் கொடூரமான தாக்குதல்களுக்கு எதிராக வீதிகளில் திரண்டார்கள்.
ஓராண்டுக் காலமாக நீடித்த இத்த கைய “கைப்பற்றுவோம்” போராட்டங் கள் புதிய புதிய வடிவங்களில் தீவிர மடைந்து வருகின்றன. வாஷிங்டன், கலிபோர்னியா, பென் சில்வேனியா, டெக்சாஸ்… என அமெ ரிக்க நகரங்கள் எங்கும், ‘நாங்கள் 99 சதவீதம் பேர்; எங்களது செல்வத்தை கொள்ளையடிக்கும் வெறும் 1 சதவீத நபர்களை ஒருபோதும் அனுமதி யோம்’ என்ற முழக்கத்துடன் பிரதான வீதிகளில், பொதுப் பூங்காக்களில், பல்கலைக்கழக மைதானங்களில், விளையாட்டு ஸ்டேடியங்களில் என எங்கெங்கு காணினும் இளைஞர்கள் அணிதிரள்கிறார்கள்.முதலாளித்துவப் பொருளாதாரத் திற்கு நேரடியாக சவால்விடும் இந்தப் போராட்டம் இனியும் நீடிக்கக்கூடாது என அமெரிக்க ஆளும் வர்க்கம் எண் ணியதன் விளைவே மேற்கண்ட கொடிய சட்டம்!
லிபியாவில் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடிய மக்கள் மீது அந்நாட்டின் ஜனாதிபதி மும்மர் கடாபி அடக்குமுறையை ஏவினார் என்று அமெரிக்கா கூப்பாடு போட்டது; ஜனநாயகத்திற்கு எங்கெல்லாம் ஆபத்து வருகிறதோ அங்கெல்லாம் காப்பாற்றுவதற்கு நாங்கள் செல்வோம் என்று கொக்கரித்த அமெரிக்கா, லிபியாவை குண்டு மழையால் துளைத்தது.
ஜனாதிபதி கடாபியை கொன்றொழித்தது.சிரியாவில் தமது அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் மக் கள் மீது அந்நாட்டின் ஜனாதிபதி பஷார் அல்-அஸாத் அடக்கு முறை யை ஏவுவதாக கடந்த சில மாதங்களாக அமெரிக்கா கூக் குரலிட்டு வருகிறது. அங்கு ஜனநாயகத்தைக் “காப்பாற்ற” தனது படை களைத் தயார் செய்து வருகிறது. சிரியாவைத் தொடர்ந்து ஈரானிலும் “ஜனநாயகம் காக்கும்” தனது பாரம்பரியத் தொழிலை செய்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. அந்தோ பரிதாபம்!உலக நாடுகளிலெல்லாம் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய வேலை ஒபாமா நிர்வாகத்திற்குத் தலைக்கு மேல் இருப் பதால் தனது சொந்த நாட்டில் ஜனநாயகத்திற்கு விடுதலை கொடுத்து விடலாம் என முடிவு செய்துவிட்டார்.
ஜனநாயகக்கட்சியோ, குடியரசுக்கட்சியோ அமெரிக்காவில் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் எப்போதும் உலக நாடு களில் ஜனநாயகத்தை பாதுகாப்பது பற்றி கவலைப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள். அதனால்தான், தங்களது சொந்த நாட்டில் ஜனநாயகப் போராட்டங்களை ஒழித்துக்கட்டுவதில் இரண்டு கட்சி களுமே ஓரணியாக நின்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எவ்வித எதிர்ப்பும் இன்றி மேற்படி கொடிய சட்டத்தை நிறைவேற்றி யிருக்கிறார்கள். ‘தாக்குண்டால் புழு கூடத் துள்ளி எழும்’ என்பதைப்போல முத லாளித்துவ கொள்கைகளின் தாக்குதல்களால் வீறுகொண்டு எழுந்து நிற்கும் அமெரிக்க உழைப்பாளி மக்கள், இந்தப் புதிய சட்டம் தாக்கத் துவங்கினால் மேலும் கொந்தளிப்புடன் எழுவார்கள் என்பது திண்ணம்.

Leave a Reply

You must be logged in to post a comment.