திண்டுக்கல், மார்ச் 4-திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆர்.கே.ஆர் மெட்ரிகுலேசன் பள்ளியில் தொடரும் மாணவர் மரணம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் சார்பில் பழனி தாலுகா அலுவலகம் முன்பு வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
உடுமலைப்பேட்டையில் உள்ள ஆர்.கே.ஆர் மெட்ரிகுலேசன் பள்ளியில்கடந்த ஒரு மாத காலத்தில்கிருஷ்ணகுமார், அனுஜ் என்ற இரு மாணவர்கள் பள்ளி வளாகத்திலேயே தற்கொலை செய்து இறந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இவ்வாறு மரணம் அடைவது தொடர்கிறது. எனவே அப்பள்ளியில் வழங்கப்படும் கடுமையான உடல் ரீதியான தண்டனைகள், சித்ரவதைகள் மற்றும் தகுதி குறைந்த ஆசிரியர்களின் தவறான அணுகு முறையே இதற்குக் காரணம் என பெற்றோர் தரப்பில் குறைகூறப்படுகிறது.
அதிகப்படியான நன்கொடை மற்றும் கல்விக் கட்டணங்கள், கூடுதல் தேர்ச்சிக்காக தவறான கற்பித்தல் முறை, மாணவர் ஜனநாயகமின்மை என அறிவியல் விரோத செயல்பாடு கொண்ட அப்பள்ளியில் தொடரும் மாணவர் மரணம் குறித்து மூத்த கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் அடங்கிய உயர் மட்ட விசாரணைக்கு தமி ழக அரசு உத்தரவிட வேண் டும் என வலியுறுத்தியும், மாணவர் தற்கொலை தொடர்பான வழக்கில் 2ம் குற்றவாளியான அப்பள்ளி யின் தாளாளர் ஆர்.கே. இராமசாமியை உடனடி யாக கைது செய்ய வேண் டும் என வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் கே.எஸ். கனகராஜ். மாவட்டச் செயலாளர் பி. முருகேசன், மாவட் டச் செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ். தனசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

Leave A Reply

%d bloggers like this: