புதுதில்லி, மார்ச் 4
-உத்தரப்பிரதேச மாநில சட்டப் பேரவைக்கான தேர்தலில் எவருக்கும் அறு திப் பெரும்பான்மை கிடைக்காது, தொங்கு சட் டமன்றமே அமைந்திடும் என்றும், பஞ்சாப்பிலும் காங்கிரசுக்கு இழுபறி நிலை யே என்றும் வாக்குச்சாவடி யிலிருந்து வாக்களித்து விட்டு வெளியே வருபவர் களிடம் கருத்துக்கணிப்பு எடுத்த ஐந்து வெவ்வேறான நிறுவனங்களுமே தெரிவித் துள்ளன.குறிப்பாக உத்தரப்பிர தேசத்தில் காங்கிரஸ் கட்சி யின் நட்சத்திர பிரச்சாரகர் ராகுல் காந்தி கடுமையாகத் தேர்தல் பணியாற்றியிருந்த போதிலும் இம்மாநிலத்தில் காங்கிரசுக்கு நான்காவது இடமே என்று வாக்குக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.உத்தரப்பிரதேச மாநிலத் தில் மொத்தம் உள்ள 403 இடங்களில் முதல் இடத் தை சமாஜ்வாதி கட்சிக்கு அனைத்து வாக்குச்சாவடிக் கணிப்புகளும் அளிக்கின் றன. ஆயினும் அது பெறும் இடங்களின் எண்ணிக்கை யைப் பொறுத்து ஒவ் வொன்றும் வேறுபடுகின்றன.
சிஎன்என்-ஐபிஎன்-தி வீக் நிறுவனம் நடத்திய வாக்குக்கணிப்பில் சமாஜ் வாதிக்கு 185 இடங்களை யும், பிஎஸ்பிக்கு 85 இடங் களையும், பாஜகவிற்கு 56 இடங்களையும், காங்கிர சுக்கு 55 இடங்களையும் அளித்திருக்கிறது. இந்தியா டிவி-சி-வோட்டர் நடத்திய வாக்குச்சாவடிக் கணிப்பில் சமாஜ்வாதிக்கு 141, பிஎஸ் பிக்கு 126, பாஜகவுக்கு 83, காங்கிரசுக்கு 36 இடங்கள் கிடைத்துள்ளன. இதே வரிசைப்படியே ஹெட்லைன்ஸ் டுடே-ஆஜ் தக் வாக்குச்சாவடிக் கணிப் பும், ஸ்டார் நியூஸ்-ஏசிநீல் சன் கணிப்பும் வரிசைப் படுத்தியுள்ளன. பஞ்சாப்பஞ்சாப் மாநில சட்ட மன்றத் தேர்தலைப் பொறுத்தவரை ஐபிஎன் வாக்குச்சாவடிக் கணிப்பு காங்கிரசுக்கு 60, சிரோன் மணி அகாலிதளம்-
பாஜக கூட்டணிக்கு 51இலிருந்து 63, மற்றவர்களுக்கு 3 இலி ருந்து 9 இடங்களை அளித் திருக்கிறது. நியுஸ் 24 – சாணக்யா நடத்திய வாக்குச் சாவடிக் கணிப்பு காங்கிர சுக்கு 60, சிரோன்மணி அகா லிதளம் + பாஜகவிற்கு 52, மற்றவர்களுக்கு 5 என்று அளித்திருக்கிறது. இந்தியா டிவி-சி வோட்டர் நடத்திய கணிப்பு மட்டும் காங்கிர சுக்கு 65 இடங்களையும், சிரோன்மணி அகாலிதளம்-பாஜக கூட்டணிக்கு 47 இடங் களையும் மற்றவர்களுக்கு 5 இடங்களையும் அளித் துள்ளது. (ந.நி)

Leave A Reply

%d bloggers like this: