நாகர்கோவில், மார்ச் 4-
கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு போராட் டக்குழுவின் ஒருங்கிணைப் பாளராக இருப்பவர் உதய குமார். இவர் நாகர்கோவில் அருகே உள்ள பழவிளை யில் சாக்கர் என்ற பெயரில் உயர்நிலைப்பள்ளி நடத்தி வருகிறார். 3 ஏக்கர் பரப்பள வில் உள்ள இந்த பள்ளியை சுற்றி சிமெண்டு கல்லால் சுமார் 75 அடி நீளத்துக்கு காம்பவுண்டு சுவர் கட்டப் பட்டு உள்ளது.சனிக்கிழமையன்று இரவில் இந்த சுவரை மர்ம நபர்கள் இடித்தனர்.
உதய குமாரின் மனைவி மீரா இது பற்றி ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்துள் ளார். சம்பவம் குறித்து உதய குமாரின் மனைவி மீரா விடம் கேட்டபோது “பள் ளிக்கூட காம்பவுண்டு சுவர் நள்ளிரவில் இடிக்கப்பட் டுள்ளது. கடந்த சில தினங் களுக்கு முன்பு எனது கண வர் நாகர்கோவிலில் பத்திரி கையாளர்களை சந்தித்த போது இந்து அமைப்பைச் சேர்ந்த ஒரு பிரிவினர் முற் றுகையிட வந்தனர். அவர் கள்தான் பள்ளி காம்ப வுண்டு சுவரை இடித்திருக்க வேண்டும் என சந்தேகிக்கி றோம். அவர்களை போலீ சார் கைது செய்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

Leave A Reply