மே.பாளையம், மார்ச் 4-
கோவை மாவட்டம், மேட்டுப்பாளைத்தில் உள்ள ரயில் நிலையத்தை நேற்று (சனிக்கிழமை) காலை சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் சுஜாதா ஆய்வு செய்தார் மேட்டுப்பாளையத்தில் இருந்து 100 ஆண்டுகளையும் கடந்த உதகைக்கு தினசரி இயக்கப்பட்டு வரும் உலக பாரம் பரிய சின்னமான மலை ரயில் பணிமனையினை அவர் பார்வையிட்டார்.
கடந்த வாரம் ரூ.10 கோடி செலவில் திருச்சி பொன்மலை ரயில்வே பணி மனையில் தயாரிக்கப்பட்ட புதிய மலை ரயில் என்ஜின் மேட்டுப்பாளைம் கொண்டு வரப்பட்டது. இதன் சோதனை ஓட்டமும் நடை பெற்றது. இது குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட சுஜாதா அங்குள்ள அதி காரிகளிடம் ஆலோச னைகளை மேற்கொண் டார். மலைரயில்பெட்டி களில் ஏறி அதன் இருக்கை அமைப்புகளை மாற்ற உத் திரவிட்டார்.
கோடைகாலம் துவங்க உள்ள நிலையில் மலைரயிலில் பயணிகள் உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையம் வருவார்கள். உள்நாட்டு பயணிகளின் கூட்டமும் அதிகரிக்கும் என்பதால் இந்த ஆய்வுப் பணி நடைபெற்றுள்ளது. மேலும் நூற் றாண்டு பழமைவாய்ந்த மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் புதிய (பிளாட் பார்ம்) நடைமேடை அமைக்கவும் ஆய்வு செய் யப்பட்டது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுஜாதா:கோடை கால சிறப்பு ரயில்களாக 9 ரயில்கள் கோவை வழியே செல்லும் வகையில் புதியதாக இயக்கப்பட உள்ளது.
அதே போல் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே கோடைகால சிறப்பு ரயில் இயக்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. தற்போது மலை ரயிலில் ஒரு பெட்டி கூடுதலாக இணைக் கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கோவை-மேட்டுப்பா ளையம் இடையே இயக் கப்படும் பயணிகள் ரயில் சேவை வரும் காலங்களில் ஞாயிற்றுக் கிழமையும் தொடர நடவடிக்கை எடுக் கப்படும் என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.