நாகர்கோவில், மார்ச் 4-
பூதப்பாண்டி அருகே உள்ள அந்தரபுரம் நயி னார் கோட்டையைச் சேர்ந்தவர் கூலித் தொழி லாளி டேவிட். இவருக்கும் இவருடைய மனைவி விஜயகுமாரிக்கும் இடையே அடிக்கடி தகராறு வரும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சனிக்கிழமையன்றும் வழக்கம் போல அவர் களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த டேவிட், மனைவி வீட்டில் இல்லாத போது விஷம் குடித் தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை உறவினர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே டேவிட் இறந் தார். அதே போல், இராஜாக்கமங்கலம் வடலி விளையைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ஆறுமுகப்பெருமாள் . சரியாக வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்ததாகக் கூறப்படு கிறது.
இதனால் அவருடைய மனைவி சாந்த குமாரி வேலைக்குச் செல்லாமல் இருந்த கண வரை அவர் கண்டித்துள்ளார். இதில் மனம் உடைந்த ஆறுமுகப்பெருமாள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Leave A Reply

%d bloggers like this: