சென்னை, மார்ச் 4 –
ஊதிய உயர்வு கோரி சென்னையில் உள்ள பிர பல தனியார் மருத்துவமனை களில் பணியாற்றும் செவிலியர் கள் சனிக் கிழமையன்று (மார்ச் 3) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட் டனர்.
மருத்துவமனை நிர் வாகங்கள் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை தீர்க்க முன்வராமல், தொழி லாளர் நலத்துறை அதிகாரிகளைக் கொண்டு செவிலியர்களை மிரட்டுவதாக கூறப்படு கிறது. இதுபற்றிய விவரம் வருமாறு:சென்னையில் இயங்கு கிற அடையாறு போர்ட் டீஸ் (மலர்) மருத்துவ மனை, முகப்பேர் எம்எம்எம் மருத்துவமனை ஆகியவற் றில் தமிழகம், கேரளா, இதர மாநிலங்களைச் சேர்ந் தவர்கள் செவிலியர் களாக பணியாற்றுகின்ற னர்.போர்ட்டீஸ் மருத்துவ மனையில் 150 செவிலியர்க ளும், எம்எம்எம் மருத்துவ மனையில் 270 செவிலியர்க ளும் பணியாற்றுகின்றனர். இச்செவிலியர்களுக்கு பல் லாண்டு காலமாக உரிய ஊதியம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் பணியில் சேரும் செவிலியர்களிடம் 2வருடத் திற்கு ஒப்பந்தம் போடுவ தோடு, சான்றி தழ்களையும் நிர்வாகங்கள் வாங்கி வைத் துக் கொள் கின்றன. அதிக பட்ச மாத சம்பளமாக 6 ஆயிரத்து 200 ரூபாய் மட் டுமே வழங்கப்படுகிறது. இதில் ஆயிரத்து 500 ரூபாயை விடுதிக் கட்டணமாக பிடித் தம் செய்து கொள்கின்றனர். நிர்வாகம் சார்பில், செவிலி யர்களுக்கு வருங்கால வைப்பு நிதியும் செலுத்தா மல் உள்ளது.
இந்தச் சூழலில், அகில இந்திய தனியார் மருத்துவ மனை செவிலியர் சங்கத் தின் சார்பில், போர்ட்டீஸ், எம்எம்எம் மருத்துவமனை களுக்கு வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட் டது. அதில், செவிலியர்க ளுக்கு ரூ.15ஆயிரம் ஊதி யம் வழங்க வேண்டும்; அனு பவத்தை அடிப்படை யாகக் கொண்டு ஆண் டுக்கு 2ஆயி ரத்து 500 ரூபாய் ஊதிய உயர்வு வழ ங்க வேண்டும், இரவு நேர பணிக்கு கூடுத லாக நூறு ரூபாய் வழங்க வேண்டும், கூடுதல் பணிக்கு மணிக்கு 100 ரூபாய் வழங்க வேண் டும், ஐசியு பிரிவில் செவி லியர் நோயாளிகள் விகி தம் 1:1, மற்ற பிரிவுகளில் 1:4 என செவிலியர் எண் ணிக்கையை உயர்த்த வேண் டும் என வலியுறுத்தப்பட்டி ருந்தது.இபோன்று அப்பல் லோ மருத்துவமனையில் சுமார் ஆயிரத்து 200 செவி லியர்கள் பணியாற்றி வரு கின்றனர். அவர்களின் சங்க மான அப்பல்லோ பதிவு பெற்ற செவிலியர் நலச்சங் கம் சார்பிலும் ஊதிய உய ர்வு கோரி டிசம்பர் மாதம் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கி இருந்தனர்.
இந்த மூன்று மருத்து வமனைகளும் செவிலியர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல், பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட் டன. இதனைக் கண்டித்து அந்த மருத்துவமனை களில் பணியாற்றும் செவிலியர் கள் மருத்துவப் பணிகளை புறக்கணித்து ஞாயிறன்று போராட்டத்தில் குதித்தனர். இதனால் மருத்துவமனை பணிகள் ஸ்தம்பித் தன.இந்த வேலைநிறுத் தத்தை சீர்குலைக்கும் வகை யில் மருத்துவமனை நிர் வாகம், பயிற்சி பெற்று வரும் செவிலியர்களை பணி யில் ஈடுபடுத்தி வருகிறது. தொழி லாளர் நலத்துறை அதிகாரி களைக் கொண்டு மிரட்டி வருகிறது. செவிலியர்களுக் கான விடுதிகளை மூடியுள் ளது. மருத்துவ மனை வளா கத்திற்குள் செல்ல செவி லியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள் ளது.இப்போராட்டத்திற்கு சிஐடியு, உழைக்கும் பெண் கள் ஒருங்கிணைப்பு குழு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகிய அமைப் புகள் ஆதரவு தெரிவித்துள் ளன. டி.ஏ.லதா (உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு), ப.முனுசாமி (சிஐ டியு), கே.வனஜகுமாரி, மரி யாள், சரஸ்வதி (மாதர் சங் கம்) உள்ளிட்டோர் இப் போராட்டத்தில் ஈடுபட் டுள்ளவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.இது தொடர்பாக இவ் வமைப்புகள் வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில், மருத்துவமனை நிர்வாகங் கள் உடனடியாக செவிலி யர்களை அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தி போராட் டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். விடுதிகளை மூடுவது, அதிகாரிகளை வைத்து மிரட்டுவது போன்ற செயல் களை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.