சென்னை, மார்ச் 3-
ஹால் டிக்கெட் கிடைக் காததால் எம்.டி., எம்.எஸ். தேர்வு எழுதும் மாணவர் கள் மருத்துவ கல்வி இயக்கு னரகத்தை சனிக்கிழமை யன்று (மார்ச் 3) முற்று கையிட்டனர்.தமிழகம் முழுவதும் எம்.டி., எம்.எஸ். தேர்வு நாளை நடைபெறுகிறது. இத்தேர்வை மொத்தம் 11,000 பேர் எழுதுகின்றனர். இதற்கான தேர்வு சென்னை பச்சையப்பன் கல்லூரி, சூரப்பேட்டை வேலம் மாள் இன்ஜினியரிங் கல்லூரி, அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி, லயோலா கல்லூரி, எத்திராஜ் கல்லூரி உள்பட 6 மையங்களில் நடக்கிறது.இதற்கான ஹால் டிக் கெட் ஒவ்வொருவருக்கும் கடந்த வாரமே அனுப்பப் பட்டது. ஆனால், சில மாண வர்களுக்கு ஹால் டிக்கெட் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், 100க்கும் அதிகமான மாண வர்கள் சனிக்கிழமை (மார்ச் 3) காலை கீழ்பாக்கம் மருத் துவ கல்வி இயக்குனரகத்தில் குவிந்தனர். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை உரு வானது.தங்களுக்கு இன்னும் ஹால் டிக்கெட் கிடைக்க வில்லை என்று தேர்வுக்குழு செயலாளர் ஷீலாவிடம் மாணவர்கள் முறையிட்ட னர். அதைத் தொடர்ந்து அவர்களுக்கு டூப்ளிகேட் ஹால் டிக்கெட் வழங்கப் பட்டது. இதைத் தொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மாணவர்கள் முற்றுகை
முதுகலை மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான நுழைவு தேர்வு நாளை நடக் கிறது. இதற்கான ஹால் டிக்கெட் வழங்குவதில் முறை கேடு ஏற்பட்டது. ஹால் டிக்கெட் கிடைக்காத மாண வர்கள், கீழ்பாக்கம் மருத் துவ இயக்குனரக அலுவல கத்தை முற்றுகையிட்டனர்.

Leave A Reply